அவனுக்கு நான் அடிமை
வட்ட திலகம்
வாட்ட மீசை
சுட்டெரிக்கும் பார்வை
சுந்தர தமிழ்
சொக்க வைக்கும் வரிகள்
சுதந்திர சுவாசம்
அத்தனைக்கும் நான் அடிமை.
தமிழை அவனிடம் யாசித்தேன்.
அதன் பின்னரே
என் உயிர் மூச்சென சுவாசித்தேன்
ஆம் பாரதிக்கு நான் அடிமை.
அவன் பாட்டுக்கும் நான் அடிமை.