ஒரு எழுத்தாணி கிடைக்கவில்லையா

கண்டங்கள் ஏழையும் சீர்களாக்கி
அண்டத்தின் ஒற்றுமையை ஆழமாக்கி
இனங்கள் இரண்டேயென வரிகளாக்கி
இப்படிதான் வாழ்வென்று வழிகாட்டிய

வள்ளுவ பெருமானே!
உனக்கான குறிப்பெழுத ஒரு
எழுத்தாணி கிடைக்கவில்லையா ?

தரணிக்கு தமிழனை அறிமுகபடுத்தி
பரணியில் பாவலனாய் வாழ்ந்து
இரணியில் ஏறிசென்ற இறையமுதே
இரண்டடி ஏற்றமே இவ்வுலகிற்கு

உன்னை உணர்த்திட ஒரு
ஓலைச்சுவடி கிடைக்கவில்லையா ?

ஏடுமுதல் இணையம் வரை
அர்த்தமற்று எழுதிக்கொண்டு
நானும் புலவனென்று கூறி என்புகழ்
நிலைக்க மட்டுமே இலக்கண நெறிமீறிடும்

எனக்கெல்லாம் ஆயிரம் வழி உள்ளபோது
அண்டத்தையே இரண்டடி இலக்கணத்தில்
அடக்கிய அதிசய இலக்கணமே உனக்கான
குறிப்பை ஒரு வரியில் எழுதியதை

பத்திரபடுத்தி காத்திருந்தால் உன்னையும்
படித்து பரவசத்தில் ஆழ்ந்திருப்பேன் -என்
ஏக்கத்தைப் போக்கி இருப்பேன் ...

எழுதியவர் : ப்ரியாராம் (14-Dec-15, 2:30 pm)
பார்வை : 186

மேலே