பொதிகை முசெல்வராசன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பொதிகை முசெல்வராசன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Feb-1953 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 1016 |
புள்ளி | : 122 |
கவிஞர், எழுத்தாளர்
நாளை விடியும் பொழுதும்
நன்றாம் என்றே நம்பு
ஏழை வாழ்வும் ஓர்நாள்
ஏற்றம் கொள்ளும் நம்பு
கோழை என்றும் கோழை
கொள்கை தன்னை தள்ளு
வேலையில் வந்திடும் வெற்றி
விரைந்து தழுவிடும் நம்பு !
என்றும் நன்றாய் வாழ்வோம்
என்பதை நெஞ்சில் கொள்ளு
குன்றின் விளக்காய் மாறும்
காலம் வந்திடும் சொல்லு !
பண்பினைப் போற்றி வாழு
பாசமாய் தழுவுவார் தோளு !
அன்பின் வழியில் செல்லு
ஆனந்தம் கோடி நம்பு !
வானமும் கைவச மாகும்
நெஞ்சில் உறுதி கொண்டால்
தானம் செய்தே வாழு
தலையினைக் காக்கும் நம்பு
ஊனம் உள்ளத்தில் இன்றேல்
ஊரும் உலகும் வாழ்த்தும்
மானம் பெரிதெனக் கொள்ளு
மனமே வெல்லும் நம்பு !
வாய்ப்பு என்பது ஒருமுறை தானே
வாசலைத் தட்டும்! நழுவ விடாதே !
உடும்பாய் அதனை பற்றிப் பிடித்திடு
உயர்வுக்கு அதிலே உறுதி செய்திடு .
வாழ்த்தும் நெஞ்சம் வழிவிடும் போதே
வானத்தில் ஏறிடு ! வசதிகள் பெருக்கிடு.
வீழ்த்தப் பட்ட உணர்வால் நெஞ்சம்
துவண்டு போனது ! துடித்துக் கிடந்தது!
அணையுள் அடங்கிய தண்ணீர் போன்று
அமைதி காத்து ஆத்திரம் விடுத்தது !
குட்டிட குட்டிட குனிந்த கூட்டம்
திட்டம் ஒன்றால் தெருவினில் இணைந்தது !
கிட்டிய வாய்ப்பை கையில் எடுத்து
எட்டா தொலைவும் எட்டிப் பார்த்தது !
உலகமே சற்று உற்றுப் பார்த்திட
அகிம்சை கொள்கையில் அறவழிப் புரட்சி !
ஆண்டவர் கொண்டனர் அகத்தினில் மிரட்சி !
வாய்ப்ப
என்வாழ்வில் நீவந்தாய் ஏற்றமெல்லாம் வந்ததடி
இல்லாமை என்பதுவும் இல்லாமல் போனதடி
கண்ணாக எனையென்றும் கருத்தோடு காப்பதனால்
கவலையேதும் அண்டாமல் காததூரம் ஓடுதடி
இன்னல்கள் என்பதெல்லாம் எனைவந்து மோதாமல்
இன்பநிலை தேடிவந்து எனைஅணைத்துக் கொள்ளுதடி
நன்னெறிகள் செய்திடவே நாளுமெனை வைப்பதனால்
நல்லவனாய் வல்லவனாய் எனைமாறச் செய்துதடி !
இல்லறத்தை நல்லறமாய் நடத்துகின்ற தன்மையினால்
இதயமதில் இன்பமெனும் தேனாறு பாயுதடி
இல்லையென வருவோரின் ஏக்கமதைப் போக்குகின்ற
இயல்பான எண்ணமதை இதயத்தில் கொள்வதனால்
தொல்லையேதும் இல்லாமல் சொந்தங்கள் வாழுதடி
சொர்கமதும் தேடிவந்து உன்னுடனே ஒட்டுதடி
கள்ளமனம் இல்லாமல் காசுமனம் எண்ணாமல்
எத்தனை இடர்கள் வந்து
எமையிங் கழித்த போதும்
வித்தென முளைத்து நின்று
விந்தை பலவும் செய்வோம்.
இத்தரை தழைத்து நிற்க
உழைக்கும் வலிமை பெற்று
செத்தென பெருக வைத்து
சிறப்புடன் வாழ்வு கொள்வோம்.
காற்றென கஜாவும் இங்கே
கலங்கிட வைத்த பின்னும்
தோற்றிடப் போவ தில்லை
துடிப்புடன் எழுந்து நிற்போம்
ஆற்றலை விழிக்க வைத்து
அழிந்ததை தோற்று வித்து
கூற்றுவன் கலங்கி ஓட
கவலைகள் மறந்து வாழ்வோம்.
உழைத்த உழைப்பை யெல்லாம்
உறிஞ்சியே அழித்த பின்னும்
பிழைத்திடும் வழிகள் கண்டு
பெரும்பொருள் சேர்த்து வைப்போம்
பிழைகளைக் களைந்து என்றும்
பெருமைகள் கொண்டு சேர்ப்போம்
நுழைந்திடும் இடர்கள் யாவும்
உழுபவன் தன்னைத் தொழுதிடப் பழகு
செழிப்புடன் வாழ்வாய் என்றும் அழகு
பழிப்பவர் கண்டால் பக்குவப் படுத்து
பழிதனைத் துடைத்து பாரினில் உயர்த்து.
மற்றவர் உண்ண மண்ணில் கிடப்பான்
உற்ற தொழிலாய் உழவைக் கொள்வான்
பற்றுடன் என்றும் பயிரினை வளர்ப்பான்
உற்ற பசியினை உதறியே எறிவான்.
வெயிலும் மழையும் வேண்டியே நிற்பான்
பயிரினை உயிரினும் மேலாய் காப்பான்
இயற்கை சதிகள் அழிவினைத் தருனினும்
செயற்கை சிரிப்பால் சிந்தை நிறைவான்.
பழமை போயினும் புதுமை பிறப்பினும்
உழவே உலகின் உயரியத் தொழிலாம்
வளமை பெருகிட வாய்க்கால் வெட்டி
உழவன் பயிரிட உற்றன செய்வீர்.
ஆளும் அரசும் அவனைப் பேணி
வாழும் வழிவகை நன்றாய் செய்
நீதியும் நேர்மையும் நிலைகலைய –பல
சாதியச் சண்டைகள் நடக்குதடா
மோதலும் சாதலும் நிறைந்திருக்கும் –ஒரு
பாதகம் கொண்ட உலகமடா !
வன்முறை எங்கும் வலைவிரிக்க –வெடிக்
குண்டுகள் வெடித்திடும் உலகமடா
புன்னகை நெஞ்சில் பூப்பூக்க –ஒரு
புதிய உலகினி வருமோடா !
நஞ்சினை விதைத்திடும் மாந்தரினம் –ஒரு
நாயினும் கீழாய் ஆனதடா
பிஞ்சினைக் கூட பிய்த்தெறியும் –பெரும்
பேய்க்குணம் நிறைந்த உலகமடா !
மதமும் மதமும் மோதுவதால் –பல
மனித உயிர்கள் மடியுதடா
பதப்பட தோன்றிய மதமின்று –ஒரு
பதற்றம் நிறைந்து போனதடா...
அறிவுகள் வளர்ந்து உயர்ந்தாலும் –ஒரு
அணுவினால் உலகம் அழியுதடா
பறந்து சென்று வாழ்ந்திடத்தான் –ஒரு
புதி
வஞ்சனைக் கூட்டம் பெருகுது –அதன்
வன்முறை பரந்து விரியுது
கொஞ்சமோ தொல்லைகள் கொடுக்குது-தினம்
கொலைக்களம் காண துடிக்குது.
வாளைக் கையில் எடுக்குது –பலர்
வாழ்வை அதனால் முடிக்குது.
தேளாய் கொட்டி வதைக்குது –அதன்
கொடுமை நித்தமும் பெருகுது.
பாலியல் வன்முறை கூடுது-அதைப்
படித்திடும் நெஞ்சமோ பதறுது
வேலியே பயிரினை மேயுது –எனும்
வேதனை நெஞ்சினை அடைக்குது.
பணத்தைத் தேடி அலையுது –உயர்
பண்புகள் அதனால் தொலையுது
தணலைக் கொட்டி எரிக்குது-ஒரு
தறுதலை ஆகித் திரியுது.
விளையும் நிலத்தை பறிக்குது-அது
வீணாய் போயிட வைக்குது
களையென பொய்யரை வளர்க்குது-அதைக்
கண்டும் காணா திருக்குது.
நஞ்சினை மனதில்
தொண்டுகள் செய்திடப் பழகு –அதைத்
தொடர்ந்து செய்தால் அழகு
உண்டு கிடப்பது வீணு –எனும்
உணர்வு தன்னைப் பேணு !
தொண்டுகள் செய்தால் பாராட்டு –அது
தொடர்ந்திட தினமும் சீராட்டு
துண்டுகள் போட எண்ணாதே –பின்
தோல்வியைக் கண்டு துவழாதே !
துடிப்பவர் கண்டால் தூக்கிவிடும் –நல்
தொண்டினை என்றும் தொடர்ந்துவிடு.
விடியும் பொழுதைக் காட்டிடவே –தினம்
விடியும் வரையும் பொறுத்துவிடு !
நாட்டில் செய்யணும் தொண்டு –அதை
நாலு பேர்கள் கண்டு
நாட்டம் நெஞ்சில் கொண்டு –அதில்
விளையும் நன்மையை மொண்டு !
தொண்டு செய்தால் மேன்மை –அதைத்
தொடர்ந்தால் வந்திடும் பெருமை
தொண்டு செய்தால் இனிக்கும் –ஒரு
தீங்கு நினைத்தல் ப
நாட்டுக்கு நாளும் உழைத்தவர்-பல
நன்மைகள் நாட்டிலே விதைத்தவர்
வீட்டையும் மறந்து வாழ்ந்தவர்-பல
விந்தைகள் செய்தே உயர்ந்தவர்.
கல்விச் சாலைகள் அமைத்தவர்-நல்
இலவசக் கல்வியும் தந்தவர்
கொல்லும் பசியினைப் போக்கிட-மதிய
உணவுத் திட்டமும் அளித்தவர்.
தொழிலால் நாடு உயர்ந்திட –தொழிற்
சாலைகள் பலவும் அமைத்தவர்
வழிவழித் தொழிலை மாற்றிட-பல
வழிவகை அமைத்துக் கொடுத்தவர்.
பதவி ஆசையைத் துறந்தவர்-வரும்
பணத்தையும் வாழ்வினில் மறந்தவர்
உதவிடும் எண்ணங்கள் கொண்டவர்-அந்த
உணர்வினை மனத்தினில் நிறைத்தவர்.
படிக்காமல் மேதை ஆனவர்-பலர்
படித்திட வழிவகைச் செய்தவர்.
துடித்திடும் இளைஞர்கள் முன்னேற-பல
திட்டங்கள்
என்னையே நானிங்கு நினைத்தேன்-அதில்
உன்னையும் துணையென இணைத்தேன்
அன்பினால் இங்குனைப் பிணைத்தேன்-அந்த
உணர்வினால் உன்னையும் அணைத்தேன்.
சொல்லிடச் சொல்லிட இனிக்கும்-அந்த
சொர்க்கமே வந்திங்கு கிடக்கும்
மெல்லிடை தன்னையும் அணைக்கும்-ஒரு
மோகமே சூழ்தங்கு பிணைக்கும்.
கண்ணோடு கண்ணங்கு பேசிடும்-அந்தக்
காதலால் பெண்ணங்கு கூசிடும்
பண்போடு பாசத்தைக் காட்டிடும்-ஒரு
பரிவோடு உறவினைக் கூட்டிடும்.
இன்பத்தேன் என்றென்றும் பொழியும்-அந்த
இனிமையில் பெண்னென்றும் நெழியும்
துன்பங்கள் எல்லாமும் அழியும் -தினம்
திகட்டாத சுக மதுவும் வழியும்.