சிந்தை கொள்

ஆழமான சிந்தனை!
அரவனைத்துச் செல்லும்
உன் விடிவுக்காய்!!!
தேடல் இன்றி
தேனாய் சுவைக்கும்
எதுவும் நிலைக்காது
அறிவாய் நீ!!
வானைத்தைத் தொட முடியாது
முடியும் முயன்று பார்!!
அறிவில் முதுமை
உனை வாழ்த்தும்!!
முடியாது எனும் வார்த்தை!
முதுகெலும்பில்லாதவன் கொண்ட
நஞ்சான வாக்கு!!
கல்வியைப் போற்று
கயவரைத் தூற்று
அவரை திருத்திப் பார்
திரும்பிப் பார்ப்பார்
பலபேர் உன்னை!!
உதவு
ஊழல் அற்ற அப்பாவிகளுக்கு!
அவர் மனதில் வாழ்வாய்!
அவணி போற்றும் உன்னை!!
என்றும் மாற்றான்
மனம் குளிர வாழ்வாய்!!
மலராய் புத்தெழுச்சி பெறுவாய்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (1-Aug-15, 10:11 am)
சேர்த்தது : ஜவ்ஹர்
Tanglish : sinthai kol
பார்வை : 282

மேலே