வெந்து கொல்லுது கதிரோன்

வெயிலாய் கொட்டுகிறது
வானம்
நிழலை போர்வையாய் போர்த்தினாலும்
அகல மறுக்கிறது வெம்மை!

தண்மை இழந்த காற்றும்
உடன் சேர்ந்து
என்னுடலை தீய்த்து
சுகம் காண்கிறது
கருணையே
இல்லாமல்!

உச்சிப் பொழுது உச்சம்
காண்கிறது
இச்சை தீர்த்து கச்சை கட்டி
என் மேல் விழுந்து
கட்டிப் பிறழ்கிறது
இரக்கமே இல்லாமல்!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (9-Apr-23, 8:18 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 87

மேலே