வரிகள் வருடும்

வரிகள் வருடும் !!!
================
அவசர உலகில்
தொலைந்து போனது
பல உண்டு !
தொலைந்து போனவர்
பலர் உண்டு !

பின்னோக்கி ஓடும்
சிந்தையை தடுக்க
முயன்று தோற்று
மனமின்றி மனம்
நோக்குது !

உள்ளத்தில் நின்று
அகன்றனர் சிலர் !
நெஞ்சில் தங்கி
விலகியவர் சிலர் !
இதயத்தால் ஈர்த்து
நிலைத்தவர் சிலர் !

உறுத்தும் மனம்
நினைப்பவருக்கு !
நின்று தொடரும்
இதயம் உள்ளவருக்கு !
புரியாத சிலருக்கு
குழப்பம் நிச்சயம் !

மனிதம் உள்ளவர்
அறிவர்
புனிதம் எதுவென
புரிந்தோர் !
வரிகள் வருடும்
பலருக்கு !
வார்த்தைகள் நெருடும்
சிலருக்கு !


பழனி குமார்
09.04.2023

எழுதியவர் : பழனி குமார் (9-Apr-23, 10:48 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 75

மேலே