சிலிர்த்து இயங்கியது

சிலிர்த்து இயங்கியது
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

உதறிய நுண்துகள்களாய்
சிதறிய சிந்தனைகளை
பதறிய நெஞ்சமுடன்
கதறிய இதயமது
சிந்திய விழிநீர்
மேனியில் வழிந்திட
மார்கழி பனியாக
அங்கம் குளிர்ந்திட
பங்கம் வந்தெதன
நடுங்கிய சிந்தை
சீறிய வேங்கையாய்
கூரிய நுண்ணறித்
திறன் கொண்டு
இறைந்த சிதறல்களை
அள்ளி அணைத்து
இதயத்தில் இணைத்து
கோர்த்தப் பூச்சரமாய்
நெய்த நெஞ்சால்
பூப்பெய்திய பெண்ணாக
சிலிர்த்து இயங்கியது
பூரித்த உள்ளமும் !!!


பழனி குமார்
10.04.2023

எழுதியவர் : பழனி குமார் (11-Apr-23, 8:31 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 568

மேலே