கவலையைக் கூட்டுது

கவலையை கூட்டுது !!!
()()()()()()()()()()()()()()()()()()()


பித்தம் தலைக்கேறி
சித்தம் தெளிவின்றி
சத்தம் போடுவதோடு
குத்தம் குறைகூறியே
நித்தம் காலங்கழிக்கும்
அரைகுறை மாந்தர்
அகிலத்தில் உண்டு !

அரசியல் களத்தின்
அரிச்சுவடி அறியாமல்
அதிகமாக பேசுவது
அன்றாடம் காட்சியாகி
அறியாமை சாட்சியாகி
அலங்கோல நிலையாகி
அறிந்தவற்கு சவாலாகி
அவலத்தை உருவாக்கி
அதிகார போதையால்
அண்மைக் காலமத்தில்
அண்டத்தை சீர்குலைக்க
வழிவகுக்கும் செயலானது !

வருங்கால தலைமுறை
பெரும்பாலும் கைபேசியில்
கவனம் செலுத்துவதோ
கடிவாளமிலா காளைகளாக
பிடிமானமிலா கன்னியராக
வலம்வரும் கோலமதுவோ
கவலைதனைக் கூட்டுது !


பழனி குமார்
11.04.2023

எழுதியவர் : பழனி குமார் (11-Apr-23, 7:51 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 39

மேலே