தூக்கம் தொலைத்த மின்சாரம்

தூக்கம் தொலைத்த மின்சாரம்

மின் விசிறிக்கு
வீட்டம்மாவின் தடை உத்தரவு
மீறினால் சூரசம்காரமாகி
சம்சாரம்
மின்சாரமாகிறாள்!

பழகிப் போன
பாழாய்ப் போன விசிறியால்
உசிரே போகிறது
வெக்கையில் உடல் தகிக்கிறது!

தூக்கம் தொலைத்த
மின்சாரம் ராவெல்லாம்
மின் விசிறியை ஏக்கமாய்
பார்க்கச் செய்திருக்கிறது!

தட்டு முட்டுச் சாமான்களோடு
சேர்த்து வைத்து
அழகு பார்க்க விருப்பமாம்
மனையாள் என் காதுபடச் சொல்வது கேட்கிறது!

இப்போதெல்லாம் இரவுகள்
என்னைப் பார்த்து
ஏலனமாய் சிரிக்கிறது
நானும் சேர்ந்து நீண்ட இரவுகளோடு ஆற்றாமல் சிரிக்கிறேன்!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (19-Feb-23, 11:19 am)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 62

மேலே