தன்னை ஏமாற்றும் ஒப்பாரி
அங்கீகரிக்கப்பட்ட
அடிமை
சீடன்
கொலைகளை
பயமின்றிச் செய்பவன்
வேடன்
கருங் கற்களின்
அழகை சிதைக்கிறான்
சிற்பி
செய்யாத பாவத்திற்காய்
நெருப்பில் வேகுறது
களிமண் பாண்டங்கள்
தூரங்களை
விரட்டிச் செல்கிறது
வண்டிகள்
தன்னையே ஏமாற்றிக்கொண்டு
கண்ணீர் வடிக்கிறது
ஒப்பாரி