சத்தியா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சத்தியா |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 11-Oct-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 201 |
புள்ளி | : 34 |
இயற்கையின் இணைப்பால்
நண்பர்களாக கைகோர்த்தும்
பல கதைகள் பல எண்ணங்கள்
என் வாழ்க்கையின் வரம் நீ .....
என்னையும் அறியாமல் என்னுள் நீ
வந்தாய்....
பூக்களுக்குள் மறைந்து இருக்கும்
தேன் போல என்னுள்ளும்
உன் மேல் கொண்ட காதலை
மறைத்து வைத்திருக்கிறேன்
நீ என்னை ஏற்றுக்கொண்டால்
வரம் ......
என் காதலை சொல்ல
காத்துருக்கிறேன்
14 பிப்ரவரி...........
என்னவனே
என் வாழ்வில் கிடைத்த வரம் நீ
என் நட்பும் நீ
என் காதலும் நீ
என் உயிரும் நீ
என் கவிதையும் நீ.....
உன்னை எனக்கு தந்த
கடவுளுக்கு நன்றி
உன்னை பிரிய வரம்
வேண்டும் என் உயிர்
இந்த மண்ணில் வாழும் வரை .........
உன் மேல் வைத்த
நம்பிக்கையையும் அன்பையும்
இன்று நீயே போடு உடைத்து
விட்டாய்.....
இத்தனை நாட்கள் என்னை
நம்ப வைத்து ஏமாற்றினாய்
இன்று நினைக்கும் போதே
என் மனம் செத்துப்போய்விட்டது...
எனக்கு உன்னை பிடிக்கவில்லை
நான் வேறு ஒரு பெண்ணை
விரும்புகிறேன் என்று நீ
சொல்லியிருந்தால்
உன்னை மறந்து அல்ல
உன்னை விட்டு தூரம் சென்று
இருப்பேன்.... நீ வாழ
நட்பு என்று சொல்லி
நீ செய்த
துரோகத்தை
நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்
நீ தந்த காயமும் வலியும்
என்னுள் ரணமாக இருக்கிறது
நீயும் அதை
ஒரு நாள் உணர்வாய் ......
நட்பு என்று சொல்லி
நீ செய்த
துரோகத்தை
நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்
நீ தந்த காயமும் வலியும்
என்னுள் ரணமாக இருக்கிறது
நீயும் அதை
ஒரு நாள் உணர்வாய் ......
என் பேனா எத்தனை
எழுத்துகளில் கவிதைகள்
எழுதினாலும் ....
என் மனம் எழுத துடிக்கும்
கவிதை உன் பெயர்தான்....
தோழி ஒருத்தி நீ வந்தாய்
என் வாழ்வில் வான்நிலவாய்...
நாளும் தேடும் நிம்மதியை தந்தாய்
என்னுள் .....
நட்பில் எது பாலினங்கள்
வாழ்வு உள்ள காலம்வரை
திரிவோம் நட்பு வானத்திலே...
சேட்டை பலவும் செய்தேனையே சிரிக்க
வைக்கும் கலைஞருமாய்.....
என்னை மறக்கும் நிலைதனையே செய்தாய்...
நாளும் பகலிரவாய்....
கடவுள் வரம் நீயே கண்டேன் உன்னை
முழுமதியாய்...
நட்பின் உறவாக வந்தவனும் நீ
காதலுக்கு உயிர் கொடுத்தவனும் நீ
நீ என் மீது கொண்ட அன்பையும்
அரவணைப்பையும் கண்டு நான்
என்னையே மறந்தேன்...
மனதில் பெருமை கொண்டேன்....
ஆனால் ...........
நீயோ எல்லாம் நடிப்பு
என்று சொல்லாமல் சொல்லி
இன்று வேறு ஒரு பெண்ணின்
மீது கொண்ட மோகத்திற்காக
என் உறவையும் உயிரையும்
வேரோடு பிடுங்கி செல்கிறாயே.....
என் வலியை நீ உணரவில்லையா ??
என் உயிர் நட்புக்கு
என் விழியில் விதையாய் விழுந்து
இதயத்தில் பூவாய் மலர்ந்து என்னுள்
வாசம் கொண்டவனே
நட்பு என்பது நண்பர்கள் கூடி
அரட்டை அடிப்பதில்லை
அழகான நட்பை இதயத்தில் மட்டுமே
உணர முடியும் என்று சொன்னவனே
எத்தனையோ கவிதைகள் எழுதி உள்ளேன்
உன் முகம் பார்த்து....
உன் அன்பில் கலந்து....
என் உயிர் இருக்கும் வரை
உன்னை என் இதயத்தில் சுமப்பேன்
நான் கல்லறையில் புதைந்தாலும்
என் கவிதை போல் நம் நட்பு உயிர் வாழும்