நட்பு
என் உயிர் நட்புக்கு
என் விழியில் விதையாய் விழுந்து
இதயத்தில் பூவாய் மலர்ந்து என்னுள்
வாசம் கொண்டவனே
நட்பு என்பது நண்பர்கள் கூடி
அரட்டை அடிப்பதில்லை
அழகான நட்பை இதயத்தில் மட்டுமே
உணர முடியும் என்று சொன்னவனே
எத்தனையோ கவிதைகள் எழுதி உள்ளேன்
உன் முகம் பார்த்து....
உன் அன்பில் கலந்து....
என் உயிர் இருக்கும் வரை
உன்னை என் இதயத்தில் சுமப்பேன்
நான் கல்லறையில் புதைந்தாலும்
என் கவிதை போல் நம் நட்பு உயிர் வாழும்