எண்ணப்பறவை

எண்ணப்பறவை

எண்ணப் பறவை சிறகை விரிக்க‌
எண்ணம் நூறு மனதில் குதிக்க‌
கிண்ணம் தழும்ப எடுத்து வந்தேன்
வண்ணம் ஆயிரம் இருக்கக் கண்டேன்

சின்னச் சின்ன வயதினில் நாமே
கணக்கில்லா மகிழ்ச்சியைக் கொண் டிருந்தோம்
உருவம் வளர வளர ஏனோ
மனதெல்லாம் கருமையை அடித்து வைத்தோம்

கோபம் குரோதம் பொறாமை வளர்த்தோம்
மேகம் வானம் வானவில் மறந்தோம்
நல்ல சிரிப்புகள் தள்ளிவைத்தே நாம்
பொல்லா வாழ்க்கையை வாழு கின்றோம்

அடிக்கடி கிடைக்கும் சிறுமகிழ்ச்சி விட்டு
பெரு மகிழ்ச்சி காண செல்லுகின்றோம்
கல்லும் முள்ளும் சிறிதே இடற‌
அவ்வழி விட்டு அடுத்தவழி நாடுகின்றோம்

சீரான சிந்தனை தொலைத்து விட்டோம்
ஓடுகின்ற உலகத்தில் தொலைந்து விட்டோம்
நம்மை நாமே எப்போது மீட்போம்?
நமக்கான நல்வாழ்வு காத்திருக்கு நமக்காக..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 7:37 am)
பார்வை : 181

மேலே