விளையாடலாம் வா

விளையாடலாம்_வா

வீட்டுக்குள்ளே கபடியாட்டம் விளையாடலாம் வா
சாலைமேலே நீச்சலடித்து விளையாடலாம் வா
தும்பிபிடிச்சு நூலைக்கட்டி விளையாடலாம் வா
ஒடக்கான்பிடிச்சு ஆட்டத்தில்சேத்து விளையாடலாம் வா

பல்லாங்குழியும் பரமபதமும் விளையாடலாம் வா
கில்லித்தண்டும் கண்ணாம்பூச்சியும் விளையாடலாம் வா
கோலிக்குண்டும் பம்பரமும் விளையாடலாம் வா
ராஜாராணி திருடன்போலீஸ் விளையாடலாம் வா

கொலகொலையா முந்திரிக்காவ விளையாடலாம் வா
ஒருகுடம் தண்ணியூத்தி விளையாடலாம் வா
தீப்பெட்டியட்டையும் பிலிமூம் சேர்த்து விளையாடலாம் வா
பையனும்பொண்ணும் ஓடிப்பிடிச்சு விளையாடலாம் வா

கணினிவிட்டு வெளியேவந்து விளையாடலாம் வா
கார்ட்டூன்விட்டு உலகம்பார்த்து விளையாடலாம் வா
வியர்வைசிந்த சிரிச்சுசிரிச்சு விளையாடலாம் வா
உடலும்இதயமும் வலுப்பெறவே விளையாடலாம் வா

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 7:34 am)
Tanglish : vilaiyaadalaam vaa
பார்வை : 138

மேலே