மணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மணி |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 12-Nov-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 590 |
புள்ளி | : 168 |
கரிசல் காட்டு
மண்ணாய்
கானக் குயில்களின்
கீதமாய்
மருண்டோடும் மானின்
மிரட்சியாய்
மலையருவி
வீழ்ச்சியாய்
செங்காந்தள்
மலர்களின்
கூட்டமாய்
கைதேர்ந்த
தொழிலாளியாய்
காகிதத்
தாள்களின்
உரசலாய்
கண்ணில்
இருக்கும்
கருவிழியாய்
தேனை முகர்ந்திடும்
தேனீக்களின்
கூட்டமாய்
பாய்ந்தோடும்
நதிகளின்
ஆரவாரமாய்
துள்ளிக்குதித்து
விளையாடும்
மீன்களாய்
பனியை
தணிக்கும்
போர்வையாய்
பூவில்
இருக்கும்
மகரந்தமாய்
வானில்
உலாவரும்
வெள்ளை
நிலவாய்
என்னவென்று
சொல்வேன்
எப்படிச்
சொல்வேன்
பார்க்கும்
இடமெல்லாம்
பரிணமிக்கிறாய்
அலைய
வைக்கிறாய்
அடிமையாய்
.....மொழிகளற்ற பக்கங்கள்.......
பல நாட்களாய் வெற்றிடங்களாய்
கிடந்த என் பக்கங்களை புரட்டிட ஆரம்பித்தேன்,
மொழிகளற்ற காகிதங்கள் எல்லாம்
விழித்துளிகளால் நிரம்பிக் கிடந்தன...
அதில் ஓர் துளியினை எடுத்து
உற்று நோக்கினேன்
சொல்ல முடியாத பல கதைகள் அங்கே
மௌனமாய் விழிகளின் வியர்வைத்
துளிகளை சிந்திக் கொண்டிருந்தன...
வருடத்தில் கடந்த பல நிகழ்வுகள்
உள்ளத்தை உடைத்த சில நினைவுகள்
உறங்காமல் கழித்த தினப் பொழுதுகள்
இருதயத்தைச் தொட்டுச் சென்ற
காலத்தின் வண்ணங்கள் என்று
அதில் சிதறிக் கிடந்த ஒவ்வொரு
துளிகளுக்குள்ளும் அகராதி காணாத
பல வார்த்தைகள் ஒளிந்து கொண்டிருப்பதை
என்னால் உணர்ந்து கொள்ள மு
நான் எழுதிய கவிதைகளின்
காகிதங்கள் மொத்தமும் நீயாக,
உனை வரையும் கவிக்கோலாகவே
நானும் உருமாறிப்போனேனே...
நீ இசைத்த வரிகளின்
ஸ்வரங்கள் மொத்தமும் நானாக,
எனை மீட்டும் கைவிரல்களாய்
நீயும் உருமாறிக் கொண்டாயே...
நான் வரைந்த ஓவியங்களின்
வண்ணங்கள் யாவும் நீயாக,
உனைத் தீண்டும் தூரிகையாகவே
நானு உருமாறிப்போனேனே...
நீ பார்த்த பார்வைகளின்
விழிகள் இரண்டும் நானாக,
எனை முத்தமிடும் இதழ்களாய்
நீயும் உருமாறிக் கொண்டாயே...
நான் சேகரித்த இரவுகளின்
கனவுகள் அனைத்தும் நீயாக,
உனை அணைக்கும் காதலாகவே
நானும் எனை மாற்றிக் கொண்டேனே...!
இன்று கவிதை எழுத
சற்று தாமதம்.
அவள் வரவேண்டிய பேருந்தில்
ஏதோ நேரக்குளறுபடி...!
உன்னை கண்ட நொடிதனில்
பூவுக்குள் ஏனோ ஒரு பூகம்பம்...
என் மனதுக்குள் கண்டேன்
ஓர் பிரளயம்...!
மழையற்ற நாளின்
வானவில்லாய்....
என் மனதோடு வந்தாய்
வண்ணங்களாய்...!
எங்கேயோ ...
தொலைத்த என்னை
தேடிப்பார்க்கிறேன்....
உன் விழி வழியே...!
என் கவிதையில் சொல்லா
காதலை...
உன் கண்களால்
சொல்லி சென்றாயடா...!
வன்முறை ஏனடா புரிகிறாய்...?
உன் வார்த்தைகளற்ற மௌனங்களால்...!
தனிமையும் என்னை வெறுத்ததே ...
உன் நினைவுகள்
என்னோடு த(தே)ங்கியதால்...!
மரணம் கடந்திட வேண்டுமடா...
மனதோடு நீயும் வாழ்வதனால்...!
- கீதா பரமன்
அவள் மட்டும் காமப்பொருளா
தன்னை
பெற்றவளுக்கு
மகனாய்
தன்னிலும்
மூத்தவளுக்கு
காவலனாய்
தன்னிலும்
இளையவளுக்கு
தமையனாய்
தன்னையே நம்பி
வந்தவளுக்கு
கணவனாய்
இருப்பவன்
ஊரான் வீட்டுப்
பெண்ணிற்கு
மட்டும்
ஏனடா
காமுகனாகிப்
போனாய்.......??
அடுத்தவன் தோட்டத்தில் காய்த்து தொங்கும்
மாங்காயை எண்ணி தினமும் பார்த்து ஏங்குவதுபோல்
அவளது அன்பை பெற தினமும் கோடி
ஏக்கங்கள் நான் கொள்ள வேண்டும்
அவளது முகத்தினை எண்ணி பல நாள் தூக்கங்கள்
நான் தொலைக்க வேண்டும்
என் முன்பு அவள் மினுக்கி செல்லும் அழகினை
வருடங்கள் கடந்து ரசிக்க வேண்டும்
அவளுடைய திமிரில் என்றும்
நான் தோல்வி காண வேண்டும்
அவளது அழகினை கண்டு ஆண்களுக்கு
மட்டுமல்ல
இவளை மணக்க நாமும் ஆணாக
பிறந்திருக்கலாமோ என்ற எண்ணம்
பெண்ணுக்கும் எழ வேண்டும்
எனது காதலை அவள் ஏற்கும் முன்
அவளது அழகினை சொல்லி நான்
ஒரு கவிஞன் ஆக வேண்டும்
அவளது முத
ஆணிப்பொன் நிலவே
ஆரா என்னமுதே...
தேயும் பிறையொளியின்
மங்கா மாச்சுடரே...
மயிலும் மதியிழக்கும்
துயிலும் விழி மறக்கும்
மானே நீ கடந்தால்
மஞ்சம் சிறகடிக்கும்
புரவியும் திசை மறக்கும்...!
நௌவி நின் வடிவில்
மௌவலும் விழையும்
இந்த யௌவனம் பொருள்கொள்ளும்...!
-அருண்வேந்தன்
இது வெண்மை காகிதமல்ல!
அழகு மந்திரத்தின்...
அச்சு பொறிக்கப்பட்ட...
தங்கத்தகடு!
வெற்றுக்காகிதத்தில்...
கொட்டிய வெள்ளிநிலவு!
கருப்பு உதடு தீட்டிய...
பகல்கனவின் காதல்...
முத்தங்கள்!
தேகமெல்லாம் காலம்...
கோலமிட்ட வடுக்கள்!
முகமெல்லாம் தோல்விகள்...
முத்தமிட்ட பருக்கள்!
தீராத்தாகமாய் மனதினை...
ஆழ்த்தும் சோகம்!
எனதுடலோ! துன்பத்திற்கு...
இறைச்சியின் மோகம்!
நெஞ்சத்தில் எழும்...
வினாக்களோ! ஆயிரம்!
வாழ்வினில் காணும்...
கனாக்களோ! வெற்றுக்காகிதம்!
துளிர்க்கும் துளிஇன்பத்தினை...
தூக்கிலிடும் துக்கம்!
அரிக்கும் துன்பம் ஆறடி...
தோண்டுது பக்கம்!
சலசலக்கும் சஞ்சலங்கள்...
சங்கமிக்கும் நெஞ்சம்!
சந்திசிரித்து சமாதானமாகி...
உறங்கும் கொஞ்சம்!
அனுதினமும் ஆட்க்கொண்ட
கவலையே அறுசுவை விருந்து!
ஊமைக்காயங்கள் விதையூன்றிய...
மனதிற்கு அன்னை உறவே...
பல்சுவை மருந்து
பெண்ணே! நீ!
பார்த்ததென்னமோ!
ஒருமுறை தான்!
ஆனால்! என்னுள் விளைந்தது?
உடலின் வானிலையில்
வரம்புமீறிய வர்த்தகப் பிழை!
மனதின் கடலினுள் ஓயாமல்...
ஓங்கி அறைந்திடும் பெரும் அலை!
உருக்குலைந்த உடலில்...
உறியடி விளையாடும் உயிர்!
ஒடுக்கடைந்த கன்னத்தில்...
ஊஞ்சலாடும் மரணத்தின் நிழல்!
உள்வாங்கிய கண்களில்...
உப்புமண்டி படர்வித்த வலிகள்!
விடியாத இரவினில் தொலைந்த...
விழியினைத் தேடும் விதவை இமைகள்!
இனிய கானங்களும்...
மரண ஓலங்களாக செவிமடல்தனில்
ரிங்காரமிடுகின்றன!
நாவினில் தேன்வார்த்திடும் தமிழும்...
தள்ளாட்டம் கொண்டு பிதற்றுகின்றன!
கோடிக்கணக்கான செல்களில்
நுன்பிம்பத்தின் கோலம