அருண்வேந்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண்வேந்தன்
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  30-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Apr-2015
பார்த்தவர்கள்:  352
புள்ளி:  44

என் படைப்புகள்
அருண்வேந்தன் செய்திகள்
அருண்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2017 2:01 pm

மகிழுந்தில் அமரும்
மழலைப் போலே
உனைக் கண்டதும்
மனம் மகிழுதடி...
இருக்கையைத் தேடும்
பயணியைப் போலே
இதயம் முழுதும்
உந்தன் தேடலடி..
வில்லால் தொடுக்கும்
அம்பைப் போலே
உனை நோக்கிப்
பாயும் எம்பார்வையடி...
இரவில் மலரும்
நின் கனவினாலே
மலரக் கூடா
திந்த விடியலடி...
-அருண்வேந்தன்

மேலும்

அருண்வேந்தன் - அருண்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2017 1:05 pm

வான்விலகி மண் சேரும் முன்னம்
நின் தலை நனைத்து
பேறு களிக்கும் மாமழை...
குடையாகி குஞ்சைக் காக்கும் இலையும்
நின் விரல் கோர்த்து
ஊழியங் கழிக்கும் பேழ்மழையில்...!
-அருண்வேந்தன்

மேலும்

மிக்க நன்றி நண்பா... 24-Feb-2017 12:01 pm
அழகு..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Feb-2017 1:17 pm
அருண்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 1:05 pm

வான்விலகி மண் சேரும் முன்னம்
நின் தலை நனைத்து
பேறு களிக்கும் மாமழை...
குடையாகி குஞ்சைக் காக்கும் இலையும்
நின் விரல் கோர்த்து
ஊழியங் கழிக்கும் பேழ்மழையில்...!
-அருண்வேந்தன்

மேலும்

மிக்க நன்றி நண்பா... 24-Feb-2017 12:01 pm
அழகு..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Feb-2017 1:17 pm
அருண்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 8:04 pm

வீறுகொண்டு வா காளையா
வீட்டைவிட்டு வா காளையா..
வீதிசென்று நாம் போராடினோம்
விதியை மீறியினி விளையாடுவோம்..
உனக்கென எதற்கு கட்டுப்பாடு
உதறிவிட்டு வந்து விளையாடு
சதிச்சூழ்ந்த பூமிதானிது
மதிக்கொண்டு மாற்றும் நேரமிது...

வனங்களில் ஏதடா காளை
வெள்ளையனுக்கெல்லாம் இங்கென்ன வேலை..
பரிவோடு வரும் பாம்பு நல்லதல்ல
அடித்தாலும் அன்னையவள் தீங்கல்ல..
எங்கள் பிள்ளைப் போலடா நீ
எவன் பேச்சிற்கும் அடங்காதே இனி(நீ)..
வீறுகொண்டு வா காளையா
சீறிப்பாய்ந்து வா காளையா...!
-அருண்வேந்தன்

மேலும்

அருண்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 1:39 pm

நெடிலாகிய பார்வையில்
குறிலாகிப் போகிறேன்...
மடிமீது சாயவே
மதியிழந்து தவழ்கிறேன்...
ஒருநிமிடம் தானடி
உடல்மெலியப் போகுதா...
சாய்ந்துறங்கும் காட்சியை
சங்கமேதும் சபித்ததா...
பிழையேதும் இல்லையே
பிறகென்னப் பறக்கிறாய்...!?
-அருண்வேந்தன்

மேலும்

அருண்வேந்தன் - அருண்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2016 12:41 pm

ஆணிப்பொன் நிலவே
ஆரா என்னமுதே...
தேயும் பிறையொளியின்
மங்கா மாச்சுடரே...
மயிலும் மதியிழக்கும்
துயிலும் விழி மறக்கும்
மானே நீ கடந்தால்
மஞ்சம் சிறகடிக்கும்
புரவியும் திசை மறக்கும்...!
நௌவி நின் வடிவில்
மௌவலும் விழையும்
இந்த யௌவனம் பொருள்கொள்ளும்...!
-அருண்வேந்தன்

மேலும்

மிக்க நன்றி தோழரே 05-Aug-2016 3:49 pm
கவிகளில் படர்ந்த அழகிய தமிழ் மகள் அற்புதம்! வாழ்த்துக்கள் தோழமையே! 05-Aug-2016 3:42 pm
மிக்க நன்றி தோழரே 05-Aug-2016 2:33 pm
இனிமையான வரிகளில் தமிழ் மகள் சிலிர்த்திட்டாள். வாழ்த்துக்கள் ..... 05-Aug-2016 2:09 pm
அருண்வேந்தன் - அருண்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2015 11:15 am

அழல் பிறக்கும் திருநாளில்
அகல் விளக்கின் மிதவொளியில்
ஆடலழகனின் புகழ்பாட
அண்ணாமலையானில் தஞ்சமடைய
விளக்கிட்டு தொழுதிடுவோம்
வினைகள் தீர்ந்து மகிழ்ந்திடுவோம்..

இனிய கார்த்திகை விளக்கீடு திருநாள் நல்வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி நண்பரே 26-Nov-2015 2:58 pm
நன்று... இன்பம் பொங்கட்டும் இப்போது போல எப்போதும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:51 am
நன்றி நண்பரே 25-Nov-2015 2:14 pm
மாவிளக்கு கோளத்தில் தீபங்கள் மலர்கள் பூத்து இன்பம் வீச என் கார்த்திகை திரு நாள் வாழ்த்துக்கள் 25-Nov-2015 1:14 pm
அருண்வேந்தன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2015 5:24 pm

குடிசை வீட்டில்..
மண் தரையில்..
விறகு அடுப்பில்..
மண்ச்சட்டி சமையலில்..
வாழையிலைச் சோற்றில்..
கிணற்று நீச்சலில்..
கயிற்று கட்டிலில்..
தென்னமர காற்றில்..
பனைமர நுங்கில்..
வரப்பு வயலில்..
ஊர்த் திருவிழாவில்..

இருக்கும் சுகமும் மகிழ்வும்
வேறெங்கும் இருந்து விடப்போவதில்லை...!

வாழும் சொர்க்கத்தை
தொலைத்து விட்டு
இறந்த பின்பு அதில்
வாழத் தொழுகின்றோம்...!
-அருண்வேந்தன்

மேலும்

நன்றி 03-Nov-2015 11:10 am
அருமை .... 13-Sep-2015 5:08 pm
நன்றி தோழி 03-Sep-2015 5:00 pm
நன்றி தோழி 03-Sep-2015 4:59 pm
அருண்வேந்தன் - அருண்வேந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2015 5:55 pm

மேகங்கள் சூழ்ந்தாலும்
பிறை அழகாலே எனை ஆளும்
வானழகி நீ...

கதிரவன் பால் மலர்ந்தாலும்
என் கழனியிலே தவழ்ந்தாடும்
பேரழகி நீ...

ஒருநாள் தான் என்றாலும்
மனம் முழுதும் ஆட்கொள்ளும்
மாதவி நீ...

இதுபோதும் என்றாலும்
இன்றியமையாமல் எனைக் கொல்லும்
அழகாட்கொல்லி நீ...!

மேலும்

நன்றி நண்பா 08-Apr-2015 12:31 pm
அழகாட்கொல்லி நீ... மிக ரசித்தேன் 08-Apr-2015 5:14 am
ஓடும் மேகத்தை பார்த்து கொண்டே , ஆடும் மரங்களை ரசித்து கொண்டே , வீசும் காற்றை உணர்ந்து கொண்டே , பாடும் குருவிகளின் இசையை கேட்டு கொண்டே , அமைதியான கிராமத்தில் , புவித்தாய் மடியில் , இயற்கையோடு , எழுத்தாணி முனையில் நீ . தொடரட்டும் உன் கற்பனை வாழ்த்துக்கள் நண்பா !!! 07-Apr-2015 9:45 am
இனிமையான ஒரு படைப்பு.....வாழ்த்துக்கள் 06-Apr-2015 11:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே