சொப்பன சுந்தரி

மகிழுந்தில் அமரும்
மழலைப் போலே
உனைக் கண்டதும்
மனம் மகிழுதடி...
இருக்கையைத் தேடும்
பயணியைப் போலே
இதயம் முழுதும்
உந்தன் தேடலடி..
வில்லால் தொடுக்கும்
அம்பைப் போலே
உனை நோக்கிப்
பாயும் எம்பார்வையடி...
இரவில் மலரும்
நின் கனவினாலே
மலரக் கூடா
திந்த விடியலடி...
-அருண்வேந்தன்