வீறுகொண்டு வா காளையா

வீறுகொண்டு வா காளையா
வீட்டைவிட்டு வா காளையா..
வீதிசென்று நாம் போராடினோம்
விதியை மீறியினி விளையாடுவோம்..
உனக்கென எதற்கு கட்டுப்பாடு
உதறிவிட்டு வந்து விளையாடு
சதிச்சூழ்ந்த பூமிதானிது
மதிக்கொண்டு மாற்றும் நேரமிது...

வனங்களில் ஏதடா காளை
வெள்ளையனுக்கெல்லாம் இங்கென்ன வேலை..
பரிவோடு வரும் பாம்பு நல்லதல்ல
அடித்தாலும் அன்னையவள் தீங்கல்ல..
எங்கள் பிள்ளைப் போலடா நீ
எவன் பேச்சிற்கும் அடங்காதே இனி(நீ)..
வீறுகொண்டு வா காளையா
சீறிப்பாய்ந்து வா காளையா...!
-அருண்வேந்தன்

எழுதியவர் : அருண்வேந்தன் (12-Jan-17, 8:04 pm)
சேர்த்தது : அருண்வேந்தன்
பார்வை : 340

மேலே