நீ பார்த்ததென்னமோ ஒரு முறைதான்
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே! நீ!
பார்த்ததென்னமோ!
ஒருமுறை தான்!
ஆனால்! என்னுள் விளைந்தது?
உடலின் வானிலையில்
வரம்புமீறிய வர்த்தகப் பிழை!
மனதின் கடலினுள் ஓயாமல்...
ஓங்கி அறைந்திடும் பெரும் அலை!
உருக்குலைந்த உடலில்...
உறியடி விளையாடும் உயிர்!
ஒடுக்கடைந்த கன்னத்தில்...
ஊஞ்சலாடும் மரணத்தின் நிழல்!
உள்வாங்கிய கண்களில்...
உப்புமண்டி படர்வித்த வலிகள்!
விடியாத இரவினில் தொலைந்த...
விழியினைத் தேடும் விதவை இமைகள்!
இனிய கானங்களும்...
மரண ஓலங்களாக செவிமடல்தனில்
ரிங்காரமிடுகின்றன!
நாவினில் தேன்வார்த்திடும் தமிழும்...
தள்ளாட்டம் கொண்டு பிதற்றுகின்றன!
கோடிக்கணக்கான செல்களில்
நுன்பிம்பத்தின் கோலமிட்டு அதற்கு...
கோவிலெடுத்தன!
உலகத்தில் பிரவேசிக்க தோலுரித்து...
வந்த வியர்வையும் ஓய்ந்து
உரைகின்ற மாயம்!
எரிபொருள் பாயும் நரம்புதனில்...
எரிகின்றநுன் பார்வை ஊடுருவ!
சிதையுண்ட ரத்தநாளங்களில்...
சிரிக்கின்ற பிலாக்கினங்கள்!
ஓடிவந்த தகவலும் ஓரிடத்தில் முடங்க...
மூளைவளர்ச்சியும் முடவனாகின!
வெளியேறும் மூச்சுக்காற்றும்...
வேள்வித்தீயாய் வேதம் ஓதின!
மேனிதனில் ஏணிவைத்து உந்திவந்த...
கோரப்பசிக்கொண்ட காதல் கொடியநோய்
வாழ்வுதனை கொஞ்சம்கொஞ்சமாய்...
கொரித்துத்தின்று பசியாறுகின்றன!
முறையின்றி நர்த்தனமாடும்...
காற்றுச்சிலுவையில் அறைந்த கைகால்கள்!
பூவிதழ் போன்ற இதயத்தினில்...
கனரக வாகனங்கள் அணிவகுக்கின்றன!
கனவினை களவாடிச்சென்ற களவு படர்கொடி!
மனதினில் படர்ந்த கவலை பற்றுக்கொடி!
குத்தவைத்து உட்காரவும் முடிவதில்லை!
கூனிக்குறுகி உறங்கவும் முடிவதில்லை!