இராகுல் கலையரசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இராகுல் கலையரசன்
இடம்:  பட்டுக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2016
பார்த்தவர்கள்:  1545
புள்ளி:  106

என்னைப் பற்றி...

கருவறையில் இருந்த கல்லை
கடவுள் என்பதை கண்டு
தன்னை கருவறை யாக்கி
என்னை கடவுள் ஆக்கியவளை
என் அம்மா என்பதா?
பெண் பிரம்மா என்பதா?

-தாயின் செல்லப்பிள்ளை
தமிழின் ஆசை பிள்ளை.

என் படைப்புகள்
இராகுல் கலையரசன் செய்திகள்
இராகுல் கலையரசன் - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2019 3:51 pm

மஞ்சம் துயிலும் மாலே
************************************************

வஞ்சம் வறண்டமனம் பஞ்சமா பாதகம்
அஞ்சாப் பழிபாவம் நெஞ்சினுள் அடையாது
தஞ்சமெனக் கெஞ்சுமேனைக் காத்திடுவாய் அரவமணை
மஞ்சம் துயில்கின்ற மாலே !

மேலும்

அய்யா வஞ்சம் வேறு வறண்ட மனம் வேறு . பஞ்சமாபாதகத்தில் வஞ்சம் கிடையாது. கொலை, கொள்ளை - - - போன்றவையே வரும் . தங்கள்பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி 24-Jan-2019 3:59 pm
இது மரபு கவிதையா , இலக்கணத்தோடு இயைந்த கவிதையா நானறியேன் . என் மனவெளிப்பாட்டில் வரும் கற்பனைகள் வரிகள் அவ்வளவே . தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி 24-Jan-2019 3:56 pm
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி 24-Jan-2019 3:53 pm
இறங்கி வரவே மனம் உருகி கிறங்கி இவ்வேண்டுதல் தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி மருத்துவரே 24-Jan-2019 3:53 pm
இராகுல் கலையரசன் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2019 5:03 pm

அரசியல் வியாதிகளே
நீங்கள் வெள்ளாடை
அணிய ஏன்
ஏழைகளை வெள்ளாடாய்
வெட்டுகிறீர்

இனி யாரையும்
கருப்பு ஆடு எனத் திட்டாதீர்
இலங்கைத் தமிழர்கள்
கொல்லப்பட்டபோது
உங்களில் சிலர் கருப்பு ஆடை
அணிந்து கருப்பு ஆடாய்
மாறினீர்

போர் அளவிற்கு
போராடாது
பேரளவிற்கு போராடினீர்கள்

அங்கே
தமிழர் உயிர்களும் உடல்களும்
உண்ணும் விரகம் நிகழ்ந்தேறியது
இங்கே
அடையாள உண்ணாவிரதம்
நிகழ்ந்தேறியது

நங்கள் மாக்கள்
வெளியில்
இருந்தோம்
மக்கள் வேலிக்குள்
இருந்தனர்

அங்கே
புத்தனே நடத்தினான்
பிரியாணிக் கடை

நாங்கள்தான்
எது நடந்தாலும்
மந்தையில் இருப்போம்
மந்தமாய் இருப்போம்
நீங்களுமா?

மேலும்

ஏதும் செய்ய இயலாமல் இருந்த நாமும் கருப்பு ஆடுகள் தான்... 20-Jan-2019 10:36 am
இராகுல் கலையரசன் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2019 9:29 pm

வள்ளுவன்
மிக நல்லவன்
எவ்வளவு சொன்னாலும்
கேட்காத மக்களுக்கு
1330 பாக்கள் சொன்னவன்

அதி காரம் இல்லாத
இவன் அதிகாரப்படி
நடந்து அதிகாரம்
உள்ள பதவியில் ஏழைகள்

தாடையில் வைத்தான்
தாடியை
ஒன்னரை அடியில்
வைத்தான் தடியை

மயிலாப்பூரில்
பிறந்ததாலோ என்னவோ
இவன் வரிகள்
மயில்களாய்ப் பிறந்தன

இவன்
எழுத்தாணி கொண்டு
ஓலையில்
ஏற்றியதை நாம்
முளையில் ஏற்றாது
மூலையில் ஏற்றிவிட்டோம்

மனிதன் மரை கயிலாது
மனிதம் மறையாது
காத்தது பொதுமறை

அது பொது மறை அல்ல
2000 ஆண்டிற்கு முன் அருளிய
முது மறை புது மறை

அவன் எழுத்தாணி கொண்டு
தன் எழுத்தால் அடித்தான் ஆணி

இவன் பொருள்
வைத்தால் பாடுவோர்

மேலும்

வள்ளுவனின் சிறப்புகளை சிறப்பாக கூறி வீட்டீர்..... 20-Jan-2019 10:32 am
இராகுல் கலையரசன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2018 11:22 pm

பாதி நிலா வானில்
பாலை மணல் காலடியில்
காதல் கவிதை வரவில்லை
வாழ்க்கைக்குப் பாதையும் தெரியவில்லை

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய இராகுல் 26-Nov-2018 10:13 pm
அழகிய கவி தோழா 26-Nov-2018 9:33 pm
மிக்க நன்றி கவிப்பிரிய வாசன் 26-Nov-2018 2:42 pm
அருமையான பதிவு வானடியே குறை மதி காலடியில் பாலை மணல் கவிதையும் இங்கு உதயமில்லை கவிஞன் வாழ்வும் மலரவில்லை (சரியா அய்யா 26-Nov-2018 1:12 pm
இராகுல் கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2018 9:25 pm

உன் பாதம் பார்த்து
பின்தொடர்ந்த போது தெரியாது
உன் காலடிகள் எல்லாம்
கன்னி வெடிகுண்டுகள் என்று..

மேலும்

ஆம்..அது உங்கள் நெஞ்சை துளைக்க வந்தது போல .. 28-Nov-2018 12:29 pm
இராகுல் கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2018 9:20 pm

இதழ் பிரியாது புன்னகைக்கிறாய் நீ
இதழுக்கு இடையில் உண்டான
ஒற்றை கோட்டிலே
ஒரு வரி கவிதை எழுதுகிறேன் நான்....

மேலும்

கருத்தளித்தமைக்கு நன்றி தோழி 20-Nov-2018 1:35 pm
அருமை! சகோதர. 17-Oct-2018 4:27 pm
இராகுல் கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2018 8:44 pm

காற்றில் ஒரு
கவிதை எழுதினேன்
நீ சுவாசிப்பாய்
என்று நம்பி.....

மேலும்

இராகுல் கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2018 8:38 pm

வீசிய தென்றலில்
உதிர்ந்த இலைகள்
புலம்பின
காற்றை காதலித்தது
தவறென்று...

மேலும்

நன்றி தோழிகளே 03-Aug-2018 4:09 pm
அழகு 24-Jun-2018 10:16 am
அருமை 18-Mar-2018 9:50 pm

இது நடந்துப்போகும்
தேன்கூடு
ஆயிரம் அறைகள்
கொண்டதல்ல
ஐந்தே தேன் சிந்தும்
அறைகள் கொண்டது

இதில் ஒரே ஒரு அறைக்கு
மட்டும் மகத்துவம் அதிகம்
இந்த மகத்துவம் வாய்ந்த
அறையின் தேனை
பருக நினைப்பவனெல்லாம்

அந்த அறையின் தேனீயை
அடிமையாக்கவேண்டும்
அடிமையாகாத தேனீ
மடிந்துப்போகுமே தவிர
தேன் பருக விடவே விடாது...

மேலும்

நானும் யூகிக்கிறேன்... நன்று 01-Mar-2018 9:10 am
ஆயுள் என்ற தேனை அவள் பார்வைகள் என்ற தீ குப்பைத்தொட்டிற்குள் விதையாக தூக்கி எறிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2018 6:47 pm
இராகுல் கலையரசன் - ராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2018 2:05 pm

“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை
வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த
விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை

மேலும்

அருமையான கவியை பகிர்ந்துள்ளீர்கள் தோழா... 01-Feb-2018 4:22 pm
என் மனதைக் களவாடிய பேரரசின் கவிதை 31-Jan-2018 8:41 pm

நீ சூடிக்கொண்ட ரோஜா
பொறுப்புத் துறப்பு செய்தே
தப்பித்துக்கொள்கிறது
நீ சூடாத மலர்களிடமிருந்து..!
***
உன் அணிகலன்களை
அசைய விட்டே
என்னை இசைய
வைத்துவிடுகிறாய்..!
***
தீயாய் சுடும் உன் பார்வையை
மட்டுமாவது வீசிவிட்டு போ
உன் விழி தீண்டி
என் விரதம் கலையட்டும்..!
***
இதென்ன ரோஜா கனக்கிறதே..!
இதழ்களுக்கிடையே உன் இதயத்தை
இணைத்திருக்கிறாயா?
***
உன் பார்வை ஒன்றே போதும்
என்னை சிறை வைக்கவும்..!
சிதற வைக்கவும்..!
***
தலைகோதிய உன் விரல்களால்
கைவிடப்பட்ட அந்த ஒற்றை முடி
சொல்லியது
உன் வருடலில் வலுவிழந்ததை..!
***
இரக்கமின்றி சிரிக்காதே
கிறுக்கியெனக்குள்
தானாகவ

மேலும்

தொடர் வாசிப்பிலும், கருத்திலும் பெருமகிழ்ச்சி.. அன்பும்... நன்றியும்.. 02-Aug-2017 3:58 pm
இது போன்ற கவிகள் உங்களுக்குள் எப்படி உதயமாகிறதோ? நான் அறியவில்லை. இக்கவி படித்து காதல் உணர்வு உதயமாகிவிடுகிறது என்பதை நான் அறிகிறேன் அருமை தோழி 02-Aug-2017 3:53 pm
பேரன்பும், நன்றியும்.. 02-Aug-2017 10:59 am
பேரன்பும், நன்றியும்.. 02-Aug-2017 10:59 am
நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Jul-2017 10:21 pm

தேனென நீ உதிர்த்த வார்த்தைகள்
ஆணென உன் ஆதிக்கம் தொடங்கியபின்னே
வீணானவையென விளங்கியதெனக்கு..!

மதுவுக்கும், மாதுவுக்கும்
மானத்தை விலை பேசிய உனக்கு
என் மனம் புாிந்திருக்க வாய்ப்பில்லைதான்..!

கண்ணியமிழந்தாயென நான் கதறியழ
என் கற்பையும் சீர்குலைக்க முற்பட்டாய்..!

சீதை நானென தீக்குளிப்பு செய்துவிட்டேன்
பேதையென்னை தீண்டிய அக்கினிதேவனும்
மோட்சம் கொடுக்கவில்லை..!

எங்கோ என்னை கிடத்தியிருக்கிறார்கள்
என் தேகம் மட்டும் இன்னமும்
எரிந்துகொண்டுதானிருக்கிறது..!

தாகமென சத்தமிட எத்தனிக்கிறேன்
வார்த்தைகள் தொண்டைக்குழியில்
விழுந்து தற்கொலை செய்துகொள்கின்றன..!

காலத

மேலும்

அன்பும், நன்றியும் தோழா.. 31-Jul-2017 5:03 pm
ஒரு பெண் ஆணின் வாழ்க்கையில் இன்னொரு அம்மா என்ற நான் சொல்வேன் 31-Jul-2017 4:58 pm
அன்பும், நன்றியும் தோழா.. 29-Jul-2017 4:00 pm
ராமன் பார்வையில் நம்பிக்கையற்ற சந்தேகங்கள் இராவணன் பார்வையில் புரியாத புதிராய் காதல் பல நபர்கள் நல்லவன் என்ற போர்வையில் அலைகின்றனர் ஆனால் வாழ்வதில்லை அருமையான கவி தோழி 28-Jul-2017 3:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (106)

பிரியா

பிரியா

பெங்களூரு
கயல்

கயல்

chidambaram
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
சரண்யா தென்றல்

சரண்யா தென்றல்

செய்யாறு

இவர் பின்தொடர்பவர்கள் (107)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (108)

அருண்

அருண்

இலங்கை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே