ஆடுகள் பேசினால்

அரசியல் வியாதிகளே
நீங்கள் வெள்ளாடை
அணிய ஏன்
ஏழைகளை வெள்ளாடாய்
வெட்டுகிறீர்

இனி யாரையும்
கருப்பு ஆடு எனத் திட்டாதீர்
இலங்கைத் தமிழர்கள்
கொல்லப்பட்டபோது
உங்களில் சிலர் கருப்பு ஆடை
அணிந்து கருப்பு ஆடாய்
மாறினீர்

போர் அளவிற்கு
போராடாது
பேரளவிற்கு போராடினீர்கள்

அங்கே
தமிழர் உயிர்களும் உடல்களும்
உண்ணும் விரகம் நிகழ்ந்தேறியது
இங்கே
அடையாள உண்ணாவிரதம்
நிகழ்ந்தேறியது

நங்கள் மாக்கள்
வெளியில்
இருந்தோம்
மக்கள் வேலிக்குள்
இருந்தனர்

அங்கே
புத்தனே நடத்தினான்
பிரியாணிக் கடை

நாங்கள்தான்
எது நடந்தாலும்
மந்தையில் இருப்போம்
மந்தமாய் இருப்போம்
நீங்களுமா?

நாங்கள்
புல்லை மேய்வதைப்போல்
அங்கே பிள்ளைகள் மேயப்பட்டனர்

மனிதர்களே
எங்களை உணவிற்க்காக
வெட்டி கொள்ளுங்கள்
தயவு செய்து
உங்களுக்குள் வெட்டிக் கொல்லாதீர்

எழுதியவர் : குமார் (14-Jan-19, 5:03 pm)
Tanglish : aadugal pesinal
பார்வை : 105

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே