பொங்கல் வாழ்த்து

ஏழைப் பிள்ளை
பொங்கல் அன்று பாடுகிறான்

உங்கள்
அடுப்பில் பானை
எங்கள்
அடுப்பிலோ பூனை

உங்கள்
பொங்கலில் வெல்லம்
எங்கள்
குடிசையில் வெள்ளம்

உங்கள்
வீட்டில் அமர்க்களம்
எங்கள்
வீட்டிலோ அமர்க்களம்

உங்கள்
பாலில் கூட
கிழிவதில்லை ஆடை
நான் என்று
என்று அணிவது
கிழியாத ஆடை

நீங்கள்
பொங்கலை
களித்து உண்கிறீர்
நானோ
கலி உண்கிறேன்

நீங்கள்
தோளைப் பற்றிய
கிளியோடு
நான்
எதிர்காலம் பற்றிய கிலியோடு

கரும்பின் சுவை
உங்கள் நாவில்
அச்சுவை மிகவும்
இனிக்கிறது என் கனாவில்

படிக்கும் வயதில்
நீங்கள் பள்ளிக்கு
நான் வேலை செய்ய கொல்லிக்கு

என் வறுமைக்கு
காரணம் தெரியுமா இப்பாரில்
என் தந்தை எப்போதும் பாரில்

மதுவைத் துவைப்போம்
மகிழ்வைச் சுவைப்போம்

பொங்கல் வாழ்த்துக்கள்

எழுதியவர் : குமார் (14-Jan-19, 9:57 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : pongal vaazthu
பார்வை : 115

மேலே