பள்ளி நட்பு

இதய மணிகள் கோர்த்த
பெருமதிப்பு வாய்ந்த மாலை!
காலத்தின் கட்டாயம் - திசைக்கு
ஒன்றாய்ச் சிதறிவிட்டது!

செடி விட்டகன்றால்
மல்லிகை மணமும் மறைந்திடுமோ?
தனித்து நின்றால்
மணியின் ஒளியும் மங்கிடுமோ?

இரை தேடிப் பறக்கையில்
பறவை கூட்டை மறுத்திடுமோ?
இடம் வேறு சேர்கையில்
மணிகள் மாலையை வெறுத்திடுமோ?

அண்டம் பிளந்தாலும்
அன்பு உடையாது!
பூமி புரண்டாலும் - பள்ளி
நட்பு பிரியாது !

எழுதியவர் : சுவாதி (10-Jan-19, 7:12 pm)
சேர்த்தது : சுவாதி
Tanglish : palli natpu
பார்வை : 5486

மேலே