சுவாதி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுவாதி |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 427 |
புள்ளி | : 25 |
ஊர்க்கூடி பொட்டழித்து
வளையல் உடைத்த பின்னும்
அவள் முகத்தில்
மஞ்சள் பூசியது
மாலை நேர ஞாயிறு,
விடியல் அவளுக்கும் உண்டென்று
உரைப்பது போல்!!
இயந்திரம் - மனிதன் இயக்குவது!
இல்லை - மனிதனை இயக்குவது!
ஆம்..அதுவே பொருத்தமானது!
உலகம் உங்கள் கையில் என்கிறான்!
கைப்பேசியோடு அவன் உலகமே முடிந்துவிடுகிறது!!
காலச் சக்கரம் சுழலுது
நினைவூட்ட வருகுது
புத்தாண்டு!
தோல்விகள் வாழ்வில் நிலையன்று
புதுத்தெம்பு தருகுது
புத்தாண்டு!
புலம்பல் மொழிகள் போதுமென்று
புத்துணர்வு பெருக்குது
புத்தாண்டு!
வீண் கவலை விடுத்து
புதிதாய் நாளைத் தொடங்கு!
வெற்றி நிச்சயம் உனது!!
பச்சிளங் குழந்தையாய் இருந்தபோது
என்னைத் தூக்கி அனைத்தது
என் நினைவில் இல்லை!
ஆனால் அகவை பத்து ஆனபோதும்
உன் தோளையே சிம்மாசனமாக்கி
தோட்டத்துப் பறவைகளோடு
பாடிப் பறந்த நினைவ கலவில்லை!
தத்தித் தத்தி நடந்து
நான் தடுமாறி விழுகையில்
உன் இதயம் துடிதுடிக்கும்!
ஆனால் இதழோ நகைத்திடும்!
என்னை உற்சாகப் படுத்த!
அன்றுதான் கற்றுக் கொண்டாயோ
புன்னகையில் வேதனை மறைக்கும்
அற்புத வித்தையை!
இன்று அதில் நீ விற்பன்னன்!
நீ ஓடாய் உழைத்தாய்
கவலையின்றி நான் ஓடிட!
உன் கனவுகள் தொலைத்தாய்
என் கனவுகள் நனவாகிட!
உன் தியாகம் உணரும் பருவம்
அப்பா, உன் செல்வமகள் அடைந்திட்டாள்!
இனியேனும் நிம்மதியாய்க் கண்ணுறங்கு!
உன் பெருமை காப்பாள்
நாளைய நிலை எண்ணி
நடுங்கி குலையும் நாயகனே!
உதிர்வது உறுதி என்றறிந்தும்
சிரித்து நிற்கும் பூவைப் பார்!
இன்றைய இனிமை உணர்!
விழுந்தால் கால்கள் உடையுமென்று
விம்மி அழும் வீரனே!
மேற்கில் விழுந்து கிழக்கில் எழும் பேராற்றல் மிகு பரிதியைப் பார்!
நம்பிக்கை சிறகு அணி!
எல்லாருடைய ஏளனப் பேச்சுக்கும்
செவி சாய்க்கும் திறவோனே!
அற்ப சிப்பிக்குள் உருபெரும்
அற்புத முத்தைப் பார்!
உன் தனித்துவத்தோடு பயணி!
ஒவ்வொரு நாளும் அழகாகும்!
தோல்வியும் உனக்கு தோள்கொடுக்கும்!
இலக்கு ஒருநாள் வசமாகும்!
இவ்வையம் உனக்கு உறவாகும்!
வருங்காலம் நிச்சயம் வளமாகும்!
தேடிக் கொளல் வேண்டும் - தினமும்
உழைத்து உண்ணல் வேண்டும் - பாடுபடும்
எதிலும் நல்ல பலன் கொளல் வேண்டும் - வீணர்
உறவை என்றும் விலக்க எண்ணம் வேண்டும்.
காணும் உயிரின் பால் இறையை உணர வேண்டும்
மனதில் கவலையை நீக்க வேண்டும்
மதியில் மறதி களைய வேண்டும் - பொருளின்
சேர்க்கையோடு பொறுமை மிக்க வேண்டும்
தவறு செய்தோர் கருத்தை தவறாமல் கேட்க வேண்டும்
தகுந்த தண்டனையோடு தண்டிக்க மனம் வேண்டும்
தர்மசிந்தனையோடே தணிகின்ற சினம் வேண்டும்
அறிந்து செய்யும் பிழையோரை அழிக்க துணிவு வேண்டும்
அறிவியலைத் துணைக் கொளல் வேண்டும்
ஐம்பூதங்களின் அருமை உணர வேண்டும்
அனைத்து உயிர் நலன் பேணல் வேண்டும்
ஆபத்தில்லாமல
உலகாளும் பிரமன் படைத்த
ஓரறிவு உயிருக்குத் தான்
எத்தனை இளகிய மனம்!
பசி போக்க உணவளித்தது!
தாகம் தணிக்க வழி வகுத்தது!
உயிர் வாழ இடம் கொடுத்தது!
பிராண வாயு உவந்தளித்தது!
புல்வெளி அழகு பாய் விரித்தது!
குளிர் தென்றல் சுகம் சேர்த்தது!
அதே பிரமன் படைத்த
ஆறறிவு மனிதனுக்கு மட்டும்
ஏனிந்த இறுகிய மனமோ?
ஆகாயத்தை அளக்கத் துடிக்கும் அவன்
அறம் தவறி மரம் அறுத்து
அடைந்த பயன் தான் என்ன?
வளி மண்டலத்தில் ஓட்டை
வியாதிகள் நிறைந்த வாழ்க்கை
தண்ணீருக்கு விலை
நாளை காற்றுக்கும்..
இவையா சாதனைகள்?சுயநலம் தவிர்த்து
சற்றே சிந்தித்தால்
சந்திக்கவிருக்கும் பேரழிவு தடுக்கலாம்!
சந்ததிகளும் வாழ வழி விடலாம்!!
சிந்திப்பானா?
இதய மணிகள் கோர்த்த பெருமதிப்பு வாய்ந்த மாலை! காலத்தின் கட்டாயம் - திசைக்கு ஒன்றாய்ச் சிதறிவிட்டது! செடி விட்டகன்றால் மல்லிகை மணமும் மறைந்திடுமோ? தனித்து நின்றால் மணியின் ஒளியும் மங்கிடுமோ? இரை தேடிப் பறக்கையில் பறவை கூட்டை மறுத்திடுமோ? இடம் வேறு சேர்கையில் மணிகள் மாலையை வெறுத்திடுமோ? அண்டம் பிளந்தாலும் அன்பு உடையாது! பூமி புரண்டாலும் - பள்ளி நட்பு பிரியாது !
நண்பர்கள் (6)
![கோவலூர் த.வேலவன்.](https://eluthu.com/images/userthumbs/f2/otukp_26723.jpg)
கோவலூர் த.வேலவன்.
திருகோவிலூர்
![நன்னாடன்](https://eluthu.com/images/userthumbs/f4/xvnbk_46114.jpg)
நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்
![வாசு](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
வாசு
தமிழ்நாடு
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)