விடியல்

ஊர்க்கூடி பொட்டழித்து
வளையல் உடைத்த பின்னும்
அவள் முகத்தில்
மஞ்சள் பூசியது
மாலை நேர ஞாயிறு,
விடியல் அவளுக்கும் உண்டென்று
உரைப்பது போல்!!

எழுதியவர் : சுவாதி (1-Jan-21, 12:28 pm)
சேர்த்தது : சுவாதி
Tanglish : vidiyal
பார்வை : 84

மேலே