வளமாகும் வருங்காலம்

நாளைய நிலை எண்ணி
நடுங்கி குலையும் நாயகனே!
உதிர்வது உறுதி என்றறிந்தும்
சிரித்து நிற்கும் பூவைப் பார்!
இன்றைய இனிமை உணர்!

விழுந்தால் கால்கள் உடையுமென்று
விம்மி அழும் வீரனே!
மேற்கில் விழுந்து கிழக்கில் எழும் பேராற்றல் மிகு பரிதியைப் பார்!
நம்பிக்கை சிறகு அணி!

எல்லாருடைய ஏளனப் பேச்சுக்கும்
செவி சாய்க்கும் திறவோனே!
அற்ப சிப்பிக்குள் உருபெரும்
அற்புத முத்தைப் பார்!
உன் தனித்துவத்தோடு பயணி!

ஒவ்வொரு நாளும் அழகாகும்!
தோல்வியும் உனக்கு தோள்கொடுக்கும்!
இலக்கு ஒருநாள் வசமாகும்!
இவ்வையம் உனக்கு உறவாகும்!
வருங்காலம் நிச்சயம் வளமாகும்!

எழுதியவர் : சுவாதி (11-Aug-19, 2:39 pm)
சேர்த்தது : சுவாதி
பார்வை : 219

மேலே