உன்னை பாடவே

உன்னை பாடவே
இந்த பிறவி
எல்லாம் களைந்து
உன்னை நினைந்து
எழுத்தை கோர்த்து
வார்த்தையாய் சேர்த்து
வார்த்தைகள் வசனமாக
உன்னை துதித்து
உன் அருளாலே உன்னை பாடி
அர்த்தமுள்ள வரிகளால்
வரிசையாய் உன்னை பாடிட
உள்ளம் மகிழ
மனம் நிறைய
ஓம் நமசிவாய
நாவும் நடனமாடும்
மனதின் மனப்பாடம்
செயல்களின் சேவை
என் அருணாச்சலேஸ்வரருக்கு
துதி பாட்டு
உன் அருளாலே
உன் தாழ் வணங்கி
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

எழுதியவர் : காவேரி நாதன் (8-Dec-25, 12:20 pm)
சேர்த்தது : KAVERINATHAN
Tanglish : unnai paadave
பார்வை : 10

மேலே