பிறக்குது புத்தாண்டு

காலச் சக்கரம் சுழலுது
நினைவூட்ட வருகுது
புத்தாண்டு!

தோல்விகள் வாழ்வில் நிலையன்று
புதுத்தெம்பு தருகுது
புத்தாண்டு!

புலம்பல் மொழிகள் போதுமென்று
புத்துணர்வு பெருக்குது
புத்தாண்டு!

வீண் கவலை விடுத்து
புதிதாய் நாளைத் தொடங்கு!
வெற்றி நிச்சயம் உனது!!

எழுதியவர் : சுவாதி (31-Dec-20, 3:35 pm)
சேர்த்தது : சுவாதி
Tanglish : pirakuthu puthandu
பார்வை : 5912

மேலே