யாளி

யாளி என்ற பெரிய மிருகம் உண்டு
யானையைப் போல் பத்தின் மடங்கு
யாத்திரிகர்கள் அதனைப் பார்த்த உண்டு
யாருக்கும் அது பணியாததைக் கண்டு
யாவருமே பயத்தினால் மிரண்டதும் உண்டு
யாளியோடு சிம்மம் சேர்ந்தார் போன்று சிம்ம யாளி
யாளியின் உடலோடு ஒட்டிய மகரத்தின் மகர யாளி
யாளி களிரோடு இணைந்து பிறந்த யானை யாளி
யாவருக்கும் அரியாத ஒரு மிருகத்தை
யாப்புகளில் வைத்துப் புனைந்தான் தெளி தமிழன்
யாவரும் கேளீர் என்ற அருந்தத்துவத்தை
யாக்கையாய் காத்தவனும் ஆதித்தமிழனே.
----- நன்னாடன்.