புதிதாய் பிறந்திடுவோம் புத்தாண்டில்🌹🎊💝

பிறக்கட்டும் புத்தாண்டு
இன்பங்கள் படைசூழ...

மலரட்டும் வெற்றிகள்
முயற்சியின் சின்னமாக...

தங்கட்டும் நிம்மதி
நோயற்ற வாழ்வுதனில்...

நேசிப்போம் அனைவரையும்
நெறிமுறைகள் தவறாமல்...

வீழ்சிகள் பல வந்தாலும்
நின்றிடுவோம் மன உறுதிதனில்...

எல்லாம் மாயை
என்றுணர்ந்தால்
இவ்வாண்டு மட்டுமல்ல
எவ்வாண்டும்
அமைதி நமதே....

அன்போடு அரவணைப்போம்
அனைவரையும்...
பாசத்தை போலி இல்லாமல்
பகிரந்திடுவோம்....
செய்நன்றியை இறுதி மூச்சுவரை
காத்திடுவோம்....

இவை அத்துணையும்
மனதில் கொண்டு புத்தாண்டை
மகிழ்வுடன் வரவேற்போம்....
நம்முள் உள்ள
தீமையை கொன்று
புதிதாய் பிறந்திடுவோம்....

என் இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள்....

என்றும்....என்றென்றும்....

எழுதியவர் : கிறுக்கன் (31-Dec-20, 10:45 pm)
பார்வை : 8752

மேலே