காந்தி💥
காந்தி💥
பகவானை விட பாகவதன் பெரியவன் என்று தான் இந்த தேசத்து ஆன்மீகம் நமக்கு கூறுகிறது
ராஜ்காட்டில் புதைக்கப்பட்டது காந்தி மாத்திரமல்ல அகிம்சையும் சத்தியமும் சேர்த்து புதைக்கப்பட்டது
என்று சொல்பவர்களுக்கு
நான் சொல்லுவது
அகிம்சையும் சத்தியமும் அங்கே புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டன
ருவால்டாவிலும், கானாவிலும் ரத்த ஆறு பெருகி ஓடின போதும் தென்ஆப்பிரிக்காவில் கத்தியின்றி ரத்தமின்றி தான் சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்று 27 வருடம் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவின் நெஞ்சத்துக்கு உள்ளே இருந்த உரம் இந்த விதைகளால் முளைத்த அவருக்கு கிடைத்த மாபெரும் வரம்.
காந்தி தோற்றுப்போன மனிதரல்ல. காந்தியம் காலாவதியான கோட்பாடு அல்ல
நெஞ்சத்திலே நேர்மையும், மனசாட்சியின் குரலுக்கு மதிப்பு கொடுக்கின்ற தார்மீக சத்திய ஆவேசம் எங்கெங்கே இருக்கிறதோ அந்த இடங்களெல்லாம் காந்தியம் ஜெயித்துக் கொண்டே இருக்கும்.
இந்த தேசத்து சுதந்திரத்திற்கு மகாத்மா காந்தி மட்டும்தான் காரணமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது.
இங்கே பயங்கரவாதம் இருந்தது,
இங்கே தீவிரவாதம் இருந்தது
இது எல்லாம் சேர்த்துக் கொடுத்த அழுத்தத்தின் காரணத்தினால் தான் இந்த தேசத்திற்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் ராஜாங்கம் முடிவு செய்தது என்று பலர் கதை கட்டுகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன?
இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் எந்த தருணத்தில் முடிவு செய்தது.
அவர்களுக்கு யார் இந்த அழுத்தத்தை கொடுத்தது.
இது தான் மிகப்பெரிய கேள்வி இங்கிருந்த தீவிரவாதமும் பயங்கரவாதமும் ரஜினியின் பாணியில் சொன்னால் அது பிரிட்டிஷ் ராணுவத்தில் முன் ஜூஜூபி.
அவர்கள் "ப்பூ" என்று ஊதும் தூசு.
சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை ஆளுகின்ற சர்வ வல்லமை அவர்களுக்கு இருந்தது
சபர்மதி ஆசிரமத்தில் இருந்து அறுபத்தோரு வயது கிழவன் கிளம்பினார்.
ஒரு நீண்ட நெடிய யாத்திரைக்கு.
அது உப்புக்காக தண்டியை நோக்கி யாத்திரை.
அவர் கையிலே இருந்தது ஒரு மூங்கில் குச்சி.
விரதத்தால் மெலிந்து கருத்த உடல். கண்கள் சிந்துகின்ற கருணை புன்னகை தவிர வேறு எந்த கவர்ச்சியான அணிகலன்கள் அவரிடம் இல்லை.
அவர் கிளம்பிரே அந்த தருணம் தான் பின் நாளில் நம் நாட்டிற்கு சுதந்திர தர பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்ய மிக முக்கியமான தருணம்.
அதுவே இந்திய சுதந்திர கிடைக்க ஏற்படுத்தப்பட்ட சகாப்தத்தின் பொன்னான தருணம்.
அவர் அந்த யாத்திரை மேற்கொள்ளும்போது
அவர் பின்னால் நிறைய பேர் இல்லை.
மிக குறைந்த நபர்களுடன் கிளம்பிய அந்த ஊர்வலம் போகப்கோக அதனை எப்படி பிரமண்டம் ஆக்கி கொண்டது தெரியுமா?
அது தான் மிகப்பெரிய ஆச்சரியம்.
அதுவே அகிம்சைக்கு கிடைத்த வெற்றி.
இந்திய நாட்டிலே நூறு, நூறு வருஷங்களாக வீட்டை விட்டு வெளியே வந்து பழக்கமில்லாத ஆயிரக்கணக்கான பெண்கள் இடுப்பிலே சுமந்த சிறு குழந்தைகளுடன் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆயிரமாயிரம் வருடங்களாக ஜாதி வெறியில் மூழ்கிப் போயிருந்த இந்த இந்திய சமூகத்தின் ஆண்கள் பக்கத்தில் நடந்துவரும் ஆள் யார், உன்னுடைய ஜாதி என்னவென கேட்காமல் அந்த ஊர்வலத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
லட்சோப லட்சம் பேர் கிளம்பிய கூட்டத்தில் பிரிட்டிஷ் போலீஸ் "சொத்து" "சொத்து" என தன் தடியால் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை அடித்தனர்.
அங்கே ரத்தம் பெருகியது, தலை உடைந்தது, ஆட்கள் நிறைய பேர் கீழே விழுந்தார்கள், பல பேர் அடிப்பட்டு கீழே விழுந்தாலும், அந்த ஊர்வலம் இன்னும் பிரமாண்டமாக போய்க்கொண்டிருந்தது.
யாருமே பிரிட்டிஷ் போலீஸை எதிர்த்து தன் முஷ்டியை உயர்த்தவில்லை. அங்கே வார்த்தைகளில் கூட வன்முறையை இல்லை.
இப்படி ஒரு மாபெரும் கூட்டம் கூடினால்
பீரங்கி இருந்து என்ன?
குண்டுகள் இருந்து என்ன?
உலகத்தின் மகத்தான ராணுவம் இருந்து என்ன?
இந்த கூட்டத்தில் முன்னால் தலைவணங்கி தான் ஆக வேண்டும் என்று பிரிட்டிஷ் ராஜாங்கம் முடிவு செய்த பொன்னான தருணம் அதுவே.
இந்த உலகத்தில் எந்தந்த குழுக்கள் ஆயுதமேந்தி போராட ஆரம்பித்ததோ யாருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியதோ அவர்களை கொண்றதை விட தங்களுடைய இனத்து குழுவில் இருந்த நபர்களையே அதிகமாக கொன்று குவித்தது.
இது தான் வரலாற்று ரத்தக்கரை படித்த பக்கங்கள் நமக்க திரும்பத்திரும்ப சொல்லுகின்ற பாடம்.
வெங்காயமே வெங்காயமே
நீ கூட உண்மையான காந்தியவாதி உரிக்க உரிக்க சும்மா இருந்துவிட்டு உரிப்பவரையே அழ வைத்து விடுகிறாயே
எதிராளியுடைய மனசாட்சியை தட்டி பார்க்கிற முறைதான் காந்தி சொன்ன முறை.
- பாலு.