சூதாட்டம்💥

தருமன் தாழ்ந்து போனான்
யார் செய்த சூழ்ச்சியோ
மயங்கி போனான்
சூதாட்டம் அவனை ஆட்டி படைத்தது
ஆவலுடன் ஆடினான்
வெற்றி அவனுக்கு விடுமுறை அளித்தது
தோல்வி அவனை தழுவ
எல்லாம் இழந்தான்
ஆசை, பேராசையாக மாற
தருமன் கண் மறைத்தது
தன் மனைவியே கடைசியில்
பணையம் வைத்தான்
சகுனியின் சாமார்த்தியமான செயல்
தருமனை தோல்வி அடையச்செய்தது
நிர்மூலம் ஆனான் தருமன்
கலங்கி போனான் தருமன்
துள்ளி குதித்தான் துரியோதனன்
சூதாட இனி ஒன்றும் இல்லை
சோகத்தின் உச்சியில் பாண்டவர்கள்
ஆனந்த களிப்பில் கெளரவர்கள்
மாபெரும் சபையில்
அறிவுசார் அறிஞர் சுற்றி வீற்றிருக்கும்
சபையில்
முனிவர், ஞானியர் அமர்ந்து சூழ்ந்துயிருந்த சபையில்
திருதராஷ்டரர், காந்தாரி அமர்ந்து அலங்கரித்த சபையில்
வீர பரம்மச்சாரி பீஷ்மர் அமர்ந்துயிருந்த சபையில்
துரியோதனன் ஆனையிட்டான்
அழைத்து வாருங்கள் உங்கள் பணைய பொருளை
ஐவருக்கு மனைவி பாஞ்சாலி
சபையின் நடுவே நிறுப்பட்டாள்
கூனி குறுகினர் பாண்டவ சகோதரர்கள்
துச்சாதனா! இவளை மான பங்கம் படுத்து
துரியோதனின் ஏளன குரல் ஒலிக்க
அண்ணின் ஆனையை நிறைவேற்ற
அதிரடியாக களத்தில் குதித்தான் துச்சாதனன்.
தெரளபதியின் சேலையை கலைய ஆரம்பித்தான்
ஒரு பாவம் அறியாத பாஞ்சாலி என்ன
செய்வாள்
கணவன் செய்த மாபெரும் தவறுக்கு அவள் பலிகடா ஆனாள்
கத்தினாள், கதறினாள்
ஒரு பயணும் இல்லை
அவளின் அபைய குரல் அங்கிருந்த அறிவுசார் மக்களை ஈர்க்கவில்லை
மாறாக மெளனம் சாதித்தனர்
ஒரு பெண்ணை பலர் மத்தியில் மாணபங்கம் படுத்துவது தவறு என்று
அந்த சபை சுற்றியிருந்த ஞானிகளுக்கும், முனிவர்களுக்கும் தெரியாதா
வாய்மூடி மெளனியாக அத்துனை பெருமக்களும் வேடிக்கை பார்த்தனர்
" கண்ணா, வா என்னை காப்பாற்று"
" கிருஷ்ணா வா என்னை காப்பாற்று"
" ஆபத்பாண்டவா என்னை காப்பாற்று"
" பரந்தாமனே வா என்னை காப்பாற்று"
" ஆனாதை ரட்ஷகா என்னை காப்பாற்று"
ஆக்ரோஷமாக, ஆற்பரிக்கும் கடலென
உறக்க குரல் எழுப்பினாள்.
கண்ணன், அந்த மாய கண்ணன் , கோகுல கிருஷ்ணன், மதுசூதனன், அவளின் அபய குரல் கேட்டு
அந்த நொடியே அவளுக்கு ஆதரவு கரம் நீட்டினான்
துச்சாதனன், பாஞ்சாலி சேலையை இழுக்க, இழுக்க... அது அனுமன் வால் போல் நீண்டது...
ஒரு கட்டத்தில், சோர்ந்துபோன
துச்சாதனன் மயங்கி விழுந்துவிட்டான்.
பாஞ்சாலி மானம் அந்த புருஷோத்தமன் புன்னியதால் காக்கப்பட்டது.
சூதாட்டம் எவ்வளவு கிழ்தரமானது
என்பது இந்த இதிகாச காட்சிகளே சாட்சி.
- பாலு.

எழுதியவர் : பாலு (1-Jan-21, 3:30 pm)
சேர்த்தது : balu
பார்வை : 226

மேலே