அழகிய ஒப்பந்தம்
பூக்களிடம் பூச்சிகள்
கொள்ளையடிக்கின்றனவாம்
பூச்சிகளின் சேவைக்கு
பூக்கள் தரும் கூலி தேன்
பின் எப்படியதை
கொள்ளையென்பீர்
அது
அவர்களுக்குள் போடப்பட்ட
அழகிய ஒப்பந்தம்
தப்பர்த்தம் காண்கிறோம்
நம் தேவைக்காய்
நீயும் நானும்
அதை விட்டுவிட்டு
இங்கே
அழகான ஒப்பந்தங்கள்
என்ற பெயரில் பல
கொள்ளைகள்
அரங்கேறுகின்றன...
வா
அதைப்பற்றிக் கதைப்போம்