மல்லி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மல்லி
இடம்:  சிங்கார சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Apr-2019
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  3

என் படைப்புகள்
மல்லி செய்திகள்
மல்லி - எண்ணம் (public)
24-Jul-2019 9:23 pm

தொலைந்து
போனதாக
இருந்தால்
தேடிப் பிடிக்கலாம் ...
புதைந்து
போனதாக
இருந்தால்
தோண்டி எடுக்கலாம்...
மறந்து போன
உன் மனதில்
என்னை எப்படி
மீட்டெடுப்பேன்....?

மேலும்

மல்லி - எண்ணம் (public)
03-Jul-2019 10:35 am

ஊரை விட்டுப் போகிறேன்...

அலுவலகம் கொடுத்த அவகாசம் முடிந்தது...

அலுத்துப்போன வாழ்வு மீண்டும் அழைத்தது...

விரல்விட்டு எண்ணிய விடுமுறை நாட்கள் விரைந்தோடியது..

கண்ணை விட்டு மறையும் பசுமையே உன்னை விட்டு போக முடியவில்லை...

ஊரை விட்டுப் போக மனமும் இல்லை...

என்னுடனே ரயிலேறி வந்துவிடு...

நீ இன்றி....

நீர் இன்றி....

என் நகரம் நரகமாய் போனதடி...

மேலும்

மல்லி - எண்ணம் (public)
01-Jul-2019 8:24 pm

என்னை சிறைப்பிடிக்க நினைக்காதே உன் சினத்தால்....
  ஏனெனில் ஏற்கனவே நான்   சிறைப்பட்டு விட்டேன் உன் குணத்தால்..
  கோபம் உள்ள இடத்திலேயே
  குணம் இருக்கும்.
உன் குணமே கோபமாக இருக்க நான் என்ன செய்ய...?

மேலும்

மல்லி - எண்ணம் (public)
21-Jun-2019 12:37 pm

பஞ்சம்

அழுதே அரை குடம் நிறைத்திடுவேன்
அனுதினமும்....
கண்ணீரில் மட்டும் உப்பில்லையென்றால்.

பஞ்சம் தண்ணீருக்கே...
என் நாட்டில்.
கண்ணீருக்கில்லை...

மேலும்

மல்லி - மல்லி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2019 8:35 am

விடியும் போதே பணிக்கு வந்து விடுகிறாய் தினமும்....
விடுப்பின்றி.
 
அனலில் அவிந்து போகின்றேன் நான்....
அடுப்பின்றி.
 
கறுத்தாலும்
வெறுத்தாலும்
மறுத்தாலும்
உன் வேலையை செய்கிறாய் ..
கடுப்பின்றி.
 
நீ உழைக்க...
நாங்கள் களைக்க...
கொஞ்சம் இளைப்பாறு  கதிரவனே....
 
வெயிலே 
சற்று 
 துயில் கொள்...
மயிலும் ஆடட்டும்...
மழை பொழியட்டும்...

மேலும்

நன்றி தம்பி.. 01-Jul-2019 8:17 pm
நன்றி நட்பே.. 01-Jul-2019 8:16 pm
மல்லி, நான் உங்களை உடன்பிறபாகவே எண்ணுகிறேன், ஆனாலும் சகோதரன், சகோதரி என்ற வார்த்தையின் சுருக்கமான சகோ என்ற வார்த்தையை தவிர்த்து. அண்ணா என்றோ அல்லது தம்பி என்றோ அழையுங்கள். ஏனென்றால் சகோதரன், சகோதரி என்ற வார்த்தைகள் வடமொழி சொற்கள். நன்றி 25-Jun-2019 12:24 pm
வெயிலே சற்று துயில் கொள்... மயிலும் ஆடட்டும்... மழை பொழியட்டும்... ----அருமை 21-Jun-2019 10:11 pm
மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2019 12:57 pm

இரண்டாம் காதல் போர்

 என் காதலை எப்படி சொல்வேன்..?


 முதல் முறை என்றால் வெட்கத்தோடு சொல்லிடுவேன்..
 
 இரண்டாம் முறை என்பதால் தயக்கத்தோடு சொல்கிறேன்...
 
இருண்ட உன் வாழ்வில்  இரண்டாம் ஒளியாக நான் வந்தால் ஏற்பாயா..?

 உன் திருமண வாழ்வில் தோற்று போனாய் என வருந்தாதே..

வெற்றி இடம் சொல்லாதே நான் வெற்று இடம் இனி என்னிடம் வராதே என்று...
உன் மீது பற்றோடு நான் ஒருத்தி இருக்கிறேன்..
சற்று என்னையும் எண்ணி பார் இன்று...

உன் தாரமாக வந்தால் பாரமாக மாட்டேன்...
தூரமாகி போகாதே..!
என் விழி ஈரமாகி போகுதடா..

 வெயில் படும் திசையில் உன் நிழலாவேன்...
குயில் பாடும் இசையில் உன் குழலாவேன்...

கண்ணீராய் நிறைந்த உன் விழியில் இனி..
கானல்நீராய் மறையும் உன் வலி.. என் வழியில்..

என் காதலை எப்படி உனக்கு சொல்வேன்... ?

சித்தியாக சீற மாட்டேன்..
கத்தியாக கீற மாட்டேன்..
சக்தியாக மாறுவேன் உங்களை காக்க...

தாயாராக வர தயாராக உள்ளேன்... உன் பிள்ளைக்கு மட்டுமல்ல உனக்கும்...

மேலும்

“இரண்டாம் காதல் போர்” என்ற தலைப்பை படித்தவுடன் இதுவும் வழக்கமான காதல் பாட்டு (கவிதை) என்று நினைத்துவிட்டேன்; படித்த பின்புதான் உங்களின் பாட்டின் நிலையும் அதில் சொல்ல வந்த அன்பின் வெளிப்பாடும் என்னை வியப்புக்குள்ளாக்கி விட்டது. நல்ல பாட்டு, தொடர்ந்து நல்ல பாட்டை தந்து எங்களை மகிழ்விக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். #பாட்டு - கவிதை என்ற வார்த்தையின் தமிழ் சொல். கவிதை என்பது வடமொழிச் சொல். 25-Jun-2019 3:56 pm
மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2019 11:45 pm

எங்கே சென்றாய் நட்பே..?

வாட்ஸ்அப்பில் வருவதில்லை.... 

முகநூலில் முகமும் இல்லை...
 
கால் செய்ய காலமும் இல்லை...
 
தொலைதூரம் சென்றாலும் தொலைந்து விடவில்லை... 

தொடர்பில்லையென்றாலும் தொலைத்து விடவுமில்லை.... 

என் மனதில் உன் நினைவுகள் கலைந்து போவதும் இல்லை...
 
உன்னை நினைத்து நினைத்து 
நான் களைத்து போவதும் இல்லை... 

உன்னை நினைவூட்டும் பல பொருட்கள் என்னிடம் உண்டு.. 
உன்னைத் தவிர. 

எங்கே சென்றாய் நட்பே... 

நீ உயிரோடு இருப்பதை உணர்கிறேன்... 

ஏனென்றால் நான் இன்னும் சாகவில்லையே..!!!

மேலும்

மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2019 11:38 pm

தேர்தல் நேரம்..

வாராவாரம் ஆரவாரம்....!!
ஆங்காங்கே அலறும் பிரச்சாரம்...!!

கண்கொண்டு பார்க்க கூட நேரமில்லாதவர்
நேரில் வந்து காலில் விழுவார்..!

வணங்கி விட்டுச் செல்லவா..?
வாரி விட்டுச் செல்லவா..?
நான் என்ன சொல்ல..?
இது தேர்தல் நேரம்!

அனல் பறக்கும் பேச்சு ...

போனமுறை அள்ளிவிட்டதெல்லாம் 
என்ன ஆச்சு..?

கானல் நீராய் காணாமல் போச்சு..

"திருடர்கள் ஜாக்கிரதை"
திருடப்படுவது பணம்
              அல்ல
              மனம்..

 இது தேர்தல் நேரம்!

மாறி மாறி பழி போட்டு ..
வெளிவரும் பல குட்டு..
கட்டுக் கட்டாய் காந்தி நேட்டு..
வாங்கப்படும் கள்ள ஓட்டு..
பொல்லா ஆட்சியில்
இருந்து நாட்டை மீட்டு..
நீ யாரென்று காட்டு..

இது தேர்தல் நேரம்!

இந்த முறை மயங்க போவதில்லை..
தங்கள் விந்தைகளில்..!

எந்த வாக்கும் விற்கப் படுவதில்லை..
எங்கள் சந்தைகளில்..!

தந்த வாக்கும் நிற்கப் போவதில்லை..
ஜெயித்த பின்
உங்கள் சிந்தைகளில்..!

இது தேர்தல் நேரம்..!

இது நம் நேரம்..!
 என் வாக்கு என் உரிமை!!

மேலும்

மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2019 3:16 pm

         தொலைப்பேசி துண்டித்தப் பிறகும்

            உன் வார்த்தைகள்
            கேட்டுக் கொண்டே
                   இருக்கிறதே...
       என் காதில் கோளாறா...?
                         காதல் கோளாறா...?

மேலும்

மல்லி - மல்லி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2019 11:24 pm

வலிக்காத வாழ்வு...
பலிக்காத கனவில் மட்டுமே
தோன்றும்...
வழியில் சில வலிகள் இருக்கட்டும் ...
விழியில் கொஞ்சம் ஈரம் இருக்கட்டும்...
அப்போது தான் சலிக்காத சந்தோஷங்கள் கிட்டும்...

மேலும்

நன்றி தோழிகளே.. 11-Apr-2019 3:17 pm
அருமை!! 11-Apr-2019 12:49 pm
arumaiyana ennam ....... 11-Apr-2019 11:05 am
மல்லி - Ravisrm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2019 11:14 pm

கோலமிட்ட ஓவியத்தில் காதலின் அழகு தனியே.

எழுத்து
Ravi

மேலும்

எதையும் ரசனை உள்ளதை ஆக்கும் காதல் 11-Apr-2019 9:15 pm
அழகு..👌 11-Apr-2019 11:04 am
மல்லி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2019 5:37 pm

முதிர் கன்னி பேசுகிறேன்

நான்
ஒரு ஏழை வீட்டில்
இருவர்
எதுகையும் மோனையும்
இல்லாது
எழுதிய கவிதை
என்னை யாரும் படிக்கவில்லை
இல்லை இல்லை
யாருக்கும் பிடிக்கவில்லை

என் கருவறையில்
வாழும் கடவுளுக்கு மட்டும்
நடை திறப்பு நாள்
குறிக்கப்படவே இல்லை

எந்த வண்டும்
அறியவில்லை
இப்பூவின் மணத்தை
இப்பூவையின் மனத்தை

அதனால்
தள்ளிவைத்தனர்
என் மணத்தை
தள்ளி வைத்தாலும்
நான்
தள்ளிவைக்கவில்லை
இன்னும்
கொள்ளிவைக்கவில்லை
என் மானத்தை
தன்மானத்தை

நான்
தி மு க வின் தலைவி
தி மு க என்றால்
திருமணம் முடியாக் கன்னி

மலரெல்லாம்
வடிவிடும் மாலையாக
மலர்நான்
வாடுகின்றேன் மாலையாக

ஆண் அல்ல

மேலும்

"ஆண் அல்ல ஆண்டுகள் மட்டுமே என்னை ஆண்டுகொண்டிருக்கிறது" இதற்கு என்ன சொல்லி பாராட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை, வயது ஆக ஆக உடலில் தளர்ச்சியும் மன ஆசைகளின் சிதறலையும் சிறிய வரிகளில் சிறப்பாய் சொன்ன விதம் அருமை. கணவன் என்பதாலோ என்னவோ கனவுகளில் மட்டுமே உங்களின் வார்த்தை அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. கணவன் - கனவன் (கனவில் மட்டும் வருபவன்) 25-Jun-2019 12:52 pm
இரவிடம் சில நேரம் நான் இரந்துபோகிறேன் சிலநேரம் இறந்துபோகிறேன் Aஅருமையான வரிகள்... உணவுப் பொருள் அன்று உணர்வுப் பொருள் என்று பொருள் மாறுபடுகிறது 11-Apr-2019 5:36 pm
என் மணத்தை தள்ளி வைத்தாலும் நான் தள்ளிவைக்கவில்லை இன்னும் கொள்ளிவைக்கவில்லை என் மானத்தை தன்மானத்தை .........உண்மை வரிகள் ........... 11-Apr-2019 4:02 pm
என் கருவறையில் நடை திறப்பு நாள் குறிக்கப்படவே இல்லை என்பது போன்ற அழுத்தமான வரிகளில் யதார்த்தமான சோக உணர்வு .... 11-Apr-2019 2:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே