எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடியும் போதே பணிக்கு வந்து விடுகிறாய் தினமும்.... விடுப்பின்றி....

விடியும் போதே பணிக்கு வந்து விடுகிறாய் தினமும்....
விடுப்பின்றி.
 
அனலில் அவிந்து போகின்றேன் நான்....
அடுப்பின்றி.
 
கறுத்தாலும்
வெறுத்தாலும்
மறுத்தாலும்
உன் வேலையை செய்கிறாய் ..
கடுப்பின்றி.
 
நீ உழைக்க...
நாங்கள் களைக்க...
கொஞ்சம் இளைப்பாறு  கதிரவனே....
 
வெயிலே 
சற்று 
 துயில் கொள்...
மயிலும் ஆடட்டும்...
மழை பொழியட்டும்...

பதிவு : மல்லி
நாள் : 21-Jun-19, 8:35 am

மேலே