எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர் பார்த்திருக்கும்

                              எதிர் காலம்...........

சிறகடிக்கும் முன்பே
இறக்கைகள் உடைந்து
குருதி மழையில்
நனைந்த - எம்
மனங்கள்
கண்களில்........
கனவுகளைச் சுமந்தபடி
காத்திருக்கின்றன
நிறைவேறுமா?......
என்ற ஏக்கத்துடன்!


நாகதேவன் ஈழம் 

மேலும்

நினைவுகள்

இதயம் ஆயிரம் முறை துடித்த போதோ என் எதிரில் நீ வந்தாய்
உன்னை நினைத்த போதினில்
மறக்க தெரியவில்லை
என் சுவாசமே நீ தான் என்று
உறவுகள் என்னை சுற்றி நின்றாலும் உன்தன் நினைவு
என்னை வாட்டி வதைக்கின்ற
விந்தை ஏனோ?

மேலும்

      கண்ணாடியின் மாயை    நான் உன்னை பார்க்கும் பொழுது நீ என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்.......
     நான் சிரிக்கும் பொழுது  நீ என் கூடவே சிரித்துக்கொண்டிருந்தாய்.....
    நான் அழுகும் பொழுதும் நீ என் கூடவே அழுது கொண்டிருக்கிறாய் ....... 

      உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் புன்னகையுடன்.....
         
               இப்படிக்கு கண்ணாடி.... 

மேலும்

 * இசைவான வாழ்க்கைப் 

பயணத்தின் இருப்புப் பாதைகள் 
நம்பிக்கையுடன் வாய்மை 

* இராகுகாலம் மரணயோகமென 
நல்லநேரம் தேடுகிறான் 
இருண்டது எதிர்காலம் 

* மகிழ்வுடன் சிரிக்க 
மறந்தே போனான் 
சர்க்கஸ் கோமாளி 

* வெள்ளம் வந்தால்தான் 
வெள்ளிக் காசுகள் 
படகோட்டி

* மல்லாந்து படுத்ததும் 
கோளரங்கக் காட்சிகள் 
குடிசைவீடு 

 * தாகத்தைத் தணிக்காமல் 
வளமுடன் வாழ்கிறது 
கானல் நீர் 

* ஒரு கோப்பைத் தேநீர் 
பகிர்ந்துண்டார்கள் 
புரிதலோடு பயணம் 

--கா.ந.கல்யாணசுந்தரம்

மேலும்

மன்னர் நபியே..!மாணிக்கமே..!

உம் உம்மத்தில் உதித்ததே பெரும் வரமே ..!

கருணை வடிவே..! கண்மணியே...!

நான் தழுவிட வேண்டும் உம் கரமே..!

மக்காவில் பூத்த நறுமலரே! நன்மைகள் செய்யவே மண் பிறந்தீரே ...!

வான் திரை விலகி வானவர் கோமான் திருமறை வழங்கிட வந்தாரே!

பிற உயிர்க்கெல்லாம் தீங்கு தராது அறவழி வாழ்ந்திட உரைத்தீரே...!

பாசம் நேசம் கலந்த பிணைப்பில் பலரின் மனங்களை இணைத்தீரே..


நேர்மையை தோழராய் கொண்டவரே...
ஏழ்மையை தோளில் சுமந்தீரே....

வீட்டில் செல்வம் சிறிது இருந்தாலும் தூக்கமின்றி தவிப்பீரே...!

ஏழை எளியோர்க்கு வழங்கிய பின்னே மனநிம்மதி அடைவீரே..!

பாவங்கள் நிறைந்த பூமியிலே..
 பரிசுத்தமாக்க பிறந்தீரே ..!

பெண்ணினம் கண்ட கொடுமைகளை 
மண்மூடி புதைத்தீரே..!

தரணி போற்றும் தலைவராக தன்நிகர் பெற்று சிறந்தீரே..!

மேலும்

தினம்.. தினம் ..
அனுதினம் அழைக்கிறேன் அண்ணலை ..!

மனம் ...மனம்..
எங்கிலும் தேடுகிறேன் மன்னரை..!

உங்களுடன் சேர்ந்து வாழ கொடுப்பினை இல்லை ....

உங்கள் குரல் கேட்டு மகிழ வாய்ப்பும் இல்லை.... 

உங்கள் முகம் பார்க்கும் ஒரு நொடி போதுமே ...!

அத்தருணமே உயிர் உங்கள் மடி சேருமே ..!

நபியே ..! நபியே ..!ஒருமுறை வாருங்கள் ...

உயிரே ..!உயிரே ..!
என் பெயரைக் கூறுங்கள் ...


பத்ருப் போரில் உங்களோடு சேர பாக்கியம் இல்லை ...

உங்கள் திருச்சபையில் அமர்ந்துகொள்ள அதிர்ஷ்டமும் இல்லை ..

உங்கள் அன்பு  மட்டும் இருந்தால் அது போதுமே ..!

அதை நினைத்திருந்தால் என் ஆயுள் அழகாகுமே ..!


மேலும்

கண் மூட மறுக்கிறது.. 
கண்மணியே உங்களை நாடும் ஆசையில் ..!

உள்ளம் துள்ளி ஓடுகிறது... 
உங்கள் முகம் தேடும் திசையில்...!

செவித்தேன் சுரக்கிறது.... உங்கள்மீது கவிபாடும் ஓசையில்..!

ஒரு முறை கண்டால் போதுமா..?

ஓராயிரம் முறை கண்டாலும் சலிக்குமா...?

 பல முறை கண்ட கனா பலிக்குமா...?

உங்கள் பிரிவை விட வேறு ஏதும் வலிக்குமா ...?

நினைவில் உங்கள் சிந்தனைகள் சாதாரணம் ..!
நிஜத்தில் காண முடியா வேதனைகள் சதா  ரணம்..!

நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லை...

எந்நாளும் மனம் உங்களை மறக்கவில்லை.....

எனக்காக உங்கள் விழி திறக்க வில்லை ..

எனில் பின்பு ஏன் இன்னும் நான் இறக்கவில்லை...!!???

மேலும்

காணாத கண்ணெல்லாம் காதல் கொள்ளும் காசிம் நபியே..

பாராத நெஞ்செல்லாம் பார்த்து விடத் துடிக்கும் பாச நபியே...

வரலாற்றைத் தாண்டி வாழ்வோடு கலந்த வாசமே..

ஊமை விழிகளும் 
உம் புகழ் பேசுமே ..!

விண்ணில் உயர்ந்தது நிலா ...
உங்கள் அழைப்பை ஏற்று தன்னை வெட்டிக் கொண்டதால் ....

மண்ணில் உயர்ந்தது மதினா ...
உங்கள் பூவுடலைத் தன்னோடு கட்டிக்கொண்டதால்...

நற்குணமும் நபியிடமே தங்கிவிடும்...
 நாதரின்  நற்பண்புகளைப் பார்த்தால்...!

பொறுமையும் போதுமென பொங்கிவிடும்..
 தூதரின் துயரங்களை நினைத்தால்...!


அகங்காரம் இல்லை... 
அதிகாரமும் இல்லை...
அலங்காரம் உண்டு..! 
அதுவும் அன்பை கொண்டு...  

வாளெடுத்த வாஞ்சை நபியியே..!
நெஞ்சை நிமிர்த்திய போர்க்களங்களில் அத்துமீறி சென்றதில்லை... 

அநியாயமாய் கொன்றதில்லை ...

வலிக்கிறதென்று ஓடியதில்லை...

வழி இருக்கிறதென்றும் ஓடியதில்லை...

பழி தீர்க்க நாடியதில்லை..

விழி திறக்க செய்தீரே..! வழிகாட்டியாய் வாழ்ந்து சென்றீரே..!

மேலும்

இறை தூதின் இறுதி நாட்கள்

----------*-----------------*--------------


இறை தூதின் இறுதி நாட்களை நினைத்தாலே...


குருதி கரைந்து கண்களை தாண்டி நனைத்திடுமே..!


பாவங்கள் ஏதும் செய்ததில்லை...
சோகங்கள் பலவும் தாங்கிக்கொண்டீர் ..!


கதிரவன் வெப்பம் பட்டுவிடாது மேகம் நிழலிட்ட தேகமோ..


காய்ச்சலின் வெப்பம் தொட்டுவிட சோகம் சூழ்ந்ததை
என் சொல்வேன்..?


தலைக்கணம் இல்லா 
தங்க நபியே..!


தலை கணக்க....
தாங்க முடியா
தலைவலி தந்த வேதனையை 
என் சொல்வேன் ..?


எழ முடியா வேளையிலும்.. 

தொழ முடியா நிலையிலும்... 


தோழர்கள் தோள் கொடுக்க...
தொழுகைக்கு நீர் நடக்க ...


பொற்பாதங்கள் மண்ணில் உரச...
பொங்கிவரும் கண்ணில் உசுரே கசிய..


நெஞ்சு உடைக்கும் வேதனையை 
என் சொல்வேன்..?


உட்கொண்ட விஷமோ உள்ளிருந்து காட்டியது தன் வேலையை..!


போர்த்திக் கொண்ட போர்வையும் சேர்ந்துகொண்டு மூட்டியது
அனல் உலையை..!


மயக்கத்திற்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை  போலும்! மரியாதையை ..!


தயக்கமின்றி அடிக்கடி ஆட்கொண்டது மன்னர் நபியை..!


உங்கள் வலியை வாங்கிக்கொள்ள வழியுமில்லை...


எந்தன் வலியை
சொல்லி மாள மொழியுமில்லை...


உயிர் பிரியும் நேரத்திலும் உருகிய நெஞ்சம் உம்மத்தை  மறக்கவில்லை...!


உத்தம நபியின் அன்பை தவிர உலகில் பெரிய செல்வமில்லை...!

மேலும்

உனக்கு தெரியுமா ..?
------------------------------------------


இதமாய் வீசும் தென்றலே..! 

உனக்கு தெரியுமா..? 

உன்னை விட மென்மையாய் பேசும் பெருமான் நபியை..!மண்ணில் கொட்ட வந்த மேகமே..!


நீ பார்த்ததுண்டா...?


விண்ணில் முட்ட ஈந்த 
எங்கள் வள்ளல் நபியை..!


ஓயாத அலை கொண்ட கடலே..!


தேயாத மதிமுகம் தெரிய வேண்டுமா உனக்கு..?


தேடிச் செல் மதினா நகருக்கு..!மேலும்

மேலும்...

மேலே