தினம்.. தினம் .. அனுதினம் அழைக்கிறேன் அண்ணலை ..!...
தினம்.. தினம் ..
அனுதினம் அழைக்கிறேன் அண்ணலை ..!
மனம் ...மனம்..
எங்கிலும் தேடுகிறேன் மன்னரை..!
உங்களுடன் சேர்ந்து வாழ கொடுப்பினை இல்லை ....
உங்கள் குரல் கேட்டு மகிழ வாய்ப்பும் இல்லை....
உங்கள் முகம் பார்க்கும் ஒரு நொடி போதுமே ...!
அத்தருணமே உயிர் உங்கள் மடி சேருமே ..!
நபியே ..! நபியே ..!ஒருமுறை வாருங்கள் ...
உயிரே ..!உயிரே ..!
என் பெயரைக் கூறுங்கள் ...
பத்ருப் போரில் உங்களோடு சேர பாக்கியம் இல்லை ...
உங்கள் திருச்சபையில் அமர்ந்துகொள்ள அதிர்ஷ்டமும் இல்லை ..
உங்கள் அன்பு மட்டும் இருந்தால் அது போதுமே ..!
அதை நினைத்திருந்தால் என் ஆயுள் அழகாகுமே ..!