எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண் மூட மறுக்கிறது.. கண்மணியே உங்களை நாடும் ஆசையில்...

கண் மூட மறுக்கிறது.. 
கண்மணியே உங்களை நாடும் ஆசையில் ..!

உள்ளம் துள்ளி ஓடுகிறது... 
உங்கள் முகம் தேடும் திசையில்...!

செவித்தேன் சுரக்கிறது.... உங்கள்மீது கவிபாடும் ஓசையில்..!

ஒரு முறை கண்டால் போதுமா..?

ஓராயிரம் முறை கண்டாலும் சலிக்குமா...?

 பல முறை கண்ட கனா பலிக்குமா...?

உங்கள் பிரிவை விட வேறு ஏதும் வலிக்குமா ...?

நினைவில் உங்கள் சிந்தனைகள் சாதாரணம் ..!
நிஜத்தில் காண முடியா வேதனைகள் சதா  ரணம்..!

நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லை...

எந்நாளும் மனம் உங்களை மறக்கவில்லை.....

எனக்காக உங்கள் விழி திறக்க வில்லை ..

எனில் பின்பு ஏன் இன்னும் நான் இறக்கவில்லை...!!???

பதிவு : மல்லி
நாள் : 24-Nov-20, 4:41 pm

மேலே