நாகதேவன் ஈழம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நாகதேவன் ஈழம் |
இடம் | : ஈழம் |
பிறந்த தேதி | : 04-Oct-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Aug-2022 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 17 |
நாகதேவன் ஈழம்
எழுத்தாளர்
கதிரினி...........
***********************
காற்றில் கலந்து
காதோரம் ஒரு
செய்தி வந்தது
செந்தழல் விழிகொண்ட
வீரமறத்தி ஒருத்தி
வந்த குண்டை
மார்பில் தாங்கி
விழிமூடிப் போனாள்
வானம் இடிந்து
வீழ்ந்தது தரையில்
வாழ்வனைத்தும்
வாடியது மனம்
வாகையில் குயில்
வாயுரைத்தது முகாரியை
வந்தோர் முகங்களில்
விழிநீர் தேம்பின
வாசலில் மல்லிகை
வாடியே வீழ்ந்தது
வந்தாள் வீரமகள்
வீரவணக்க கொடிபோர்த்தி......
நாகதேவன் ஈழம்.
நீ வாழ்க....!!
களம்பல கண்ட
புறநானூற்று வீரா!
புதுயுகம் கான
புயலென எழுந்த
போர் வீரா!
கலியுகத்தின் கார்
இருள்களைய பிறந்தவனே
வாழ்க! வாழ்க!
என்றும் நீ வாழ்க!
கார்த்திகை மைந்தர் ............
*********************************
பூத்திருக்கும்
பூக்களில்
உங்கள்
பூ"முகம்
தேடுகிறோம்
மெல்ல
பூவிதழ்
திறந்து
புண்ணகைப்பீர்.
எண்ணம் : நாகதேவன் ஈழம்
வினோதினி..........!!
-----------------------------------------
காந்தளின் வாசமும்!
கார்த்திகையின் ஈரமும்!
நெஞ்சில் கனக்கிறது!
கண்முன் விரியும்!
நீளும் நினைவுகள்!
உன்னில் இருந்து தொடர்கிறது !
மது காய்ச்சி விற்பவளா?
######
புதுமையைப் போற்றும் நான்
கிராமத்தில் வாழும் பட்டதாரி!
பெற்ற பெண் குழந்தைக்கு
'மது ஹாசினி' எனும்
பெயரைச் சூட்டினேன்.
என் மகள் பெயரை உச்சரிக்க முடியாதவர்கள் 'மது காசினி' என்று
உச்சரிக்கும் போது ஆத்திரமாய் வருகிறது.
உன் மகள் "மது காய்ச்சி விற்கப் போகிறாளா?"
காலம் சீரிழிந்து வருகிறது. அதற்கேற்ற பெயரை வைத்தாயா? என்றும் சிலர் கேட்கின்றார்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?
தேம்பிய தேமாக்கிளை
துக்கத்தால் அழுதது
பூசைக்கு போன பூவை நினைத்து
நாகதேவன் ஈழம்.
எதிர் பார்த்திருக்கும்
தூக்கம்
என்னை விட்டு
விலகிச் செல்கிறது
உன்
பசுமையான
நினைவுகள்
எப்போதும்
என்னருகில்
விழித்துக் கொண்டிருப்பதால்.
அவலத்தை தந்து
எம்மை
அகதியாக்கி அலைய வைத்தீரே!
மரணத்தை அளித்து
எம்மை
கால்களில்
மண்டியிட வைத்தீரே!
இன்று
அத்தனையும் மறந்தவர்களாய்
உங்கள் காலையே
சுற்றறிச் சுற்றி வருகிறோம்
விளக்கினைத் தேடிவரும்
விட்டில் பூச்சிகளாய்!
நாகதேவன் ஈழம்.