மது காய்ச்சி விற்பவளா

மது காய்ச்சி விற்பவளா?
######
புதுமையைப் போற்றும் நான்
கிராமத்தில் வாழும் பட்டதாரி!

பெற்ற பெண் குழந்தைக்கு
'மது ஹாசினி' எனும்
பெயரைச் சூட்டினேன்.

என் மகள் பெயரை உச்சரிக்க முடியாதவர்கள் 'மது காசினி' என்று
உச்சரிக்கும் போது ஆத்திரமாய் வருகிறது.

உன் மகள் "மது காய்ச்சி விற்கப் போகிறாளா?"
காலம் சீரிழிந்து வருகிறது. அதற்கேற்ற பெயரை வைத்தாயா? என்றும் சிலர் கேட்கின்றார்.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

எழுதியவர் : மலர் (24-Aug-22, 9:06 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 85

மேலே