திரித்தியா

சோதிடர் ஐயா, மூத்த பொண்ணுக்கு 'கிரித்தியா'னு‌ பேரு வச்சுட்டோம். இரண்டு வருசம் கழிச்சு இரண்டாவது பொண்ணு பிறந்திருக்குது. அதே மாதிரி ஒரு பேரைச் சொல்லுங்க ஐயா.
@@@@@
முதல் பொண்ணுக்கு நான் சொன்ன பேரு நானே உருவாக்கின பேரு.
@@@
நல்ல இராசியான‌ பேருங்க ஐயா. என் கணவருக்குப் பதவி உயர்வு கெடச்சதுங்க.
@@@@@@
அர்த்தம் இல்லாத பேரை நாமே உருவாக்கி நம்ம பிள்ளைங்களைகளுக்கு வைக்கிறதுதான் நம்ம குடும்பங்களுக்கு நல்லது. உங்க இரண்டாவது பொண்ணு பிறந்த இராசிப்படி உங்க கணவருக்கு தொலைவான தூரத்துக்கு இடமாறுதல் ஏற்படுவது கட்டாயம் நடக்கும்.
@@@@@@
ஐயா அதைத் தடுக்க ஏதாவது பரிகாரம் இருக்குதுங்களா?
@@@@@
ஒரே பரிகாரம் தான் இருக்குதும்மா.
@@@@@
சொல்லுங்க ஐயா.
@@@@@
மூத்த பொண்ணு கிரித்தியா. இரண்டாவது பொண்ணுக்கு 'திரித்தியா'னு பேரு வையுங்க. இந்தப் பொண்ணுக்கு ஐந்து வருடம் ஆகற‌ போது உங்க கணவருக்கு அடுத்தநிலைக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
@@@@@@
மிக்க நன்றிங்க ஐயா. "திரித்தியா ஸ்வீட் நேம்"ங்க ஐயா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பிறமொழிப் பெயர்களே தற்காலத் தமிழ்ப் பிள்ளைகளின் பெயர்கள் ஆனது. அர்த்தமில்லாப் பெயர்களை உருவாக்குவதில் ஆங்கிலேயர்களையும் மிஞ்சப் போகிறோம்.

எழுதியவர் : மலர் (23-Aug-22, 9:39 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 33

மேலே