சான்றிதழ் கேக்குறாங்க

(காவல் நிலையத்தில்):
என்னடா பொட்டுக்கண்ணு முகேசு? என்ன இந்தப் பக்கம்?
@@@@
ஐயா, எனது அரசியல் வாழ்கையைத் துவக்க ஆசைப்பட்டு ரவுடிங்களச் சேத்துக்கிற கட்சில சேரப்போறேன். என் உடம்பில் உள்ள வெட்டுக்காயத் தழும்புகளைக் காட்டியும் அந்தக் கட்சித் தலைவர் நம்ப மறுத்து காவல் நிலையத்தில் சான்றிதழ் வாங்கிட்டு வரச்சொல்லறாங்க.
@@@@@
அதெல்லாம் தரமுடியாதுதடா பொட்டு.
@@@@@@
ஐயா உங்கள் காவல் நிலையத்தில் இருபது வழக்கு என் மேல பதிவாகி இருக்குது. சட்டப்படி நீங்கள் சான்றிதழ் தரக் கட்டுபட்டு இருக்கிறீங்க. நீங்க தரவில்லைனா தலைவரே இங்க வர்றதாச் சொன்னாருங்க.
@@@@@
டேய் பொட்டு அரசியல்வாதிங்ககூட மோதல் வச்சுக்கூடாது. யோவ் ஏட்டு வழக்கு பதிவேட்டைப் பாத்து இந்தப் பொட்டுக் கண்ணன் மேல் பதிவான குற்ற வழக்குகளா தேதிவாரியா அச்சிட்டு கொண்டு வாங்க. டேய் பொட்டு வெளில போயிட்டு இன்னும் இருபது நிமிசம் கழிச்சு வாடா.
@@@@@
நன்றி ஐயா. என்னை மரியாதைக் குறைவா "டேய், வாடா"னெல்லாம் மரியாதைக் குறைவாக் கூப்படறதுக்கு இன்றே கடைசி நாள்.
@@@@@
சரிடா போயயிட்டு வாடா.
@@@@@@
வெளியில் செல்லும் ரவுடி பொட்டுக்கண்ணு சில சொற்களைக் கூறி "ஜே" என்று கத்திக் கொண்டே செல்கிறான்.

எழுதியவர் : மலர் (23-Aug-22, 8:45 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 66

மேலே