மரணத்தை தேடி
அவலத்தை தந்து
எம்மை
அகதியாக்கி அலைய வைத்தீரே!
மரணத்தை அளித்து
எம்மை
கால்களில்
மண்டியிட வைத்தீரே!
இன்று
அத்தனையும் மறந்தவர்களாய்
உங்கள் காலையே
சுற்றறிச் சுற்றி வருகிறோம்
விளக்கினைத் தேடிவரும்
விட்டில் பூச்சிகளாய்!
நாகதேவன் ஈழம்.

