இறை தூதின் இறுதி நாட்கள் ----------*-----------------*-------------- இறை தூதின்...
இறை தூதின் இறுதி நாட்கள்
----------*-----------------*--------------
இறை தூதின் இறுதி நாட்களை நினைத்தாலே...
குருதி கரைந்து கண்களை தாண்டி நனைத்திடுமே..!
பாவங்கள் ஏதும் செய்ததில்லை...
சோகங்கள் பலவும் தாங்கிக்கொண்டீர் ..!
கதிரவன் வெப்பம் பட்டுவிடாது மேகம் நிழலிட்ட தேகமோ..
காய்ச்சலின் வெப்பம் தொட்டுவிட சோகம் சூழ்ந்ததை
என் சொல்வேன்..?
தலைக்கணம் இல்லா
தங்க நபியே..!
தலை கணக்க....
தாங்க முடியா
தலைவலி தந்த வேதனையை
என் சொல்வேன் ..?
எழ முடியா வேளையிலும்..
தொழ முடியா நிலையிலும்...
தோழர்கள் தோள் கொடுக்க...
தொழுகைக்கு நீர் நடக்க ...
பொற்பாதங்கள் மண்ணில் உரச...
பொங்கிவரும் கண்ணில் உசுரே கசிய..
நெஞ்சு உடைக்கும் வேதனையை
என் சொல்வேன்..?
உட்கொண்ட விஷமோ உள்ளிருந்து காட்டியது தன் வேலையை..!
போர்த்திக் கொண்ட போர்வையும் சேர்ந்துகொண்டு மூட்டியது
அனல் உலையை..!
மயக்கத்திற்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை போலும்! மரியாதையை ..!
தயக்கமின்றி அடிக்கடி ஆட்கொண்டது மன்னர் நபியை..!
உங்கள் வலியை வாங்கிக்கொள்ள வழியுமில்லை...
எந்தன் வலியை
சொல்லி மாள மொழியுமில்லை...
உயிர் பிரியும் நேரத்திலும் உருகிய நெஞ்சம் உம்மத்தை மறக்கவில்லை...!
உத்தம நபியின் அன்பை தவிர உலகில் பெரிய செல்வமில்லை...!