எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

* இசைவான வாழ்க்கைப் பயணத்தின் இருப்புப் பாதைகள் நம்பிக்கையுடன்...

 * இசைவான வாழ்க்கைப் 

பயணத்தின் இருப்புப் பாதைகள் 
நம்பிக்கையுடன் வாய்மை 

* இராகுகாலம் மரணயோகமென 
நல்லநேரம் தேடுகிறான் 
இருண்டது எதிர்காலம் 

* மகிழ்வுடன் சிரிக்க 
மறந்தே போனான் 
சர்க்கஸ் கோமாளி 

* வெள்ளம் வந்தால்தான் 
வெள்ளிக் காசுகள் 
படகோட்டி

* மல்லாந்து படுத்ததும் 
கோளரங்கக் காட்சிகள் 
குடிசைவீடு 

 * தாகத்தைத் தணிக்காமல் 
வளமுடன் வாழ்கிறது 
கானல் நீர் 

* ஒரு கோப்பைத் தேநீர் 
பகிர்ந்துண்டார்கள் 
புரிதலோடு பயணம் 

--கா.ந.கல்யாணசுந்தரம்

நாள் : 23-Aug-21, 7:48 pm

மேலே