றுதல் தெரிகிறது ... சூழ்நிலையில் மட்டுமல்ல சுற்றுப் புறங்களிலும்......
றுதல் தெரிகிறது ...
சூழ்நிலையில் மட்டுமல்ல
சுற்றுப் புறங்களிலும்...
வீதிகளில் மட்டுமல்ல
வீடுகளும் தான் ...
மனிதர்களில் மட்டுமல்ல
மனங்களிலும் தான்...
ஆட்சியில் மட்டுமல்ல
காட்சிகளும் தான்...
மாறுதல்கள் நிகழ்வது
நிலத்தில் மட்டுமல்ல...
மாற்றம் அவரவர்
நிலையிலும் தான்...
ஏற்பதும் மறுப்பதும்
நமது கையில் ...
கடத்துவோம் காலத்தை
ஞாலத்தில் உள்ளவரை... !
பழனி குமார்