எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெற்றிலைபாக்கு போட்டு 
மென்று துப்பும் மூதாட்டி 
வானம் பார்க்கச் சிவந்த நிலா 

       பாண்டிய ராஜ்

மேலும்

அரசு மரியாதை 
அனுபவிக்க முடியவில்லை 
உயிர் பிரிந்த முதல்வர்

சந்தனப்பேழையில் 
சரித்திரம் உறங்குகிறது 
முதல்வர்

பலத்த பாதுகாப்பு 
இறந்த முதல்வருக்கு
சந்தனப்பேழை

வீசப்பட்டது வலை
களைந்து போனது 
மீனவன் வறுமை
 
கொளுத்தும் வெயில்
பிறந்தது மகிழ்ச்சி
கோடை விடுமுறை

கோடை விடுமுறை 
வந்தது கவலை 
பெட்டிக்கடை மூதாட்டிக்கு 

சுடுகிறது பாதம் 
கவனிக்கவில்லை 
விளையாட்டு ஆர்வம் 

நீச்சல் கற்கும் சிறுவன் 
மெதுவாய் கலைந்தது 
தண்ணீரின் பயம் 

விளையாடும் சிறுவன் 
கடிந்து பேசினாள் 
பட்டணத்துத் தாய்

 அதிகாலை சூரியன் 
தூக்கம் கலைத்தது 
அம்மாவின் சமையல் 
 
அனாதை இல்லம் 
சொந்தம் கொண்டாடினான் 
நில உரிமையாளர்

தடுப்புச்சுவர் 
விரிசல் கண்டது 
தலைபிரசவம்

தலைக்கவசம்
பாதுகாப்பானது 
காதலர்களுக்கு 

மதுபான புட்டி
அதிகமானது 
தலைக்கனம்

விட்டில் பூச்சி 
தாவிக் குதித்தது
இளமைப் பருவம்

மெழுகுவர்த்தி உருக 
கரைந்து கொண்டே வந்தது 
நம்பிக்கை

காதல் கவிதைகள் 
படிப்பதில் வருத்தம் 
தேர்வு

பாட்டி வைத்தியம் 
உயிரைக் காத்தது 
மந்தல் காமாலை

தார்ச் சாலை 
சுடுகிறது
தேநீர்

கல்லின் சுமை 
தாங்க முடியவில்லை 
பட்டினி

சாதனை மனிதன் 
சாய்ந்து கிடக்கிறான் 
கல்லறை

ஏழை உழவன் 
அதிகம் கொடுத்தான் 
உழைப்பு

குழந்தை பிறந்தது 
கூடவே சேர்ந்தது 
குடும்ப பாரம்

செயற்கை விளைச்சல் 
அதிகம் கண்டது 
நோய்

மனம் ஒத்த காதல் 
பிரிந்து போனது 
தாய் தந்தை உறவு

உத்தமன் கிடைத்தான் 
கடைசிவரை கிடைக்கவில்லை 
வேலை

பட்டம் படித்தும் 
கிடைக்கவில்லை 
நிம்மதி

என்னை இழந்தேன் 
மீண்டும்  பிறந்தேன் 
முயற்சி

உணர்வுகள் கலந்து 
துளைத்துப் போனது 
நம்பிக்கை

வீசிய தூண்டில் 
சிக்கிக் கொண்டது 
குளத்துப் பாசி 

      பாண்டிய ராஜ்

மேலும்

 * இசைவான வாழ்க்கைப் 

பயணத்தின் இருப்புப் பாதைகள் 
நம்பிக்கையுடன் வாய்மை 

* இராகுகாலம் மரணயோகமென 
நல்லநேரம் தேடுகிறான் 
இருண்டது எதிர்காலம் 

* மகிழ்வுடன் சிரிக்க 
மறந்தே போனான் 
சர்க்கஸ் கோமாளி 

* வெள்ளம் வந்தால்தான் 
வெள்ளிக் காசுகள் 
படகோட்டி

* மல்லாந்து படுத்ததும் 
கோளரங்கக் காட்சிகள் 
குடிசைவீடு 

 * தாகத்தைத் தணிக்காமல் 
வளமுடன் வாழ்கிறது 
கானல் நீர் 

* ஒரு கோப்பைத் தேநீர் 
பகிர்ந்துண்டார்கள் 
புரிதலோடு பயணம் 

--கா.ந.கல்யாணசுந்தரம்

மேலும்

வரதட்சனை;

பெண்  குழந்தை பிறந்துவிட்டால் மஹாலட்சுமி பிறந்துவிட்டால் என்று கூறுவதனாலோ என்னவோ வரதட்சனை கேட்டு நிற்கின்றார்கள் முட்டாள் மாப்பிள்ளைகள்...!

மேலும்

காசு கொடுக்கும் மெஷின் முன்

கார்டு நீட்டும் கைகள்
நகராத தொடர்வண்டியின்  
கடைசிப்பெட்டியில்  நான்

மேலும்


மேலே