எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனேகமாக நவம்பர் 18 க்குப் பிறகு, நான் பிரதிலிபி...

அனேகமாக நவம்பர் 18  க்குப் பிறகு, நான் பிரதிலிபி தளத்தில் என்னுடைய பதிவுகளைச் செய்ய ஆரம்பித்தேன்..இதற்கு எவ்வித முக்கியக் காரணமும் இல்லை. இரண்டு தளத்தையும் என்னிரண்டு கண்கள் போலத்தான் பாவிக்கிறேன்.  எழுத்து தள வாசகர்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.  ஆனால், இன்றுவரை எழுதுவதை நிறுத்தவில்லை, ஏராளமாக எழுதிவிட்டேன். இந்த ஒருவருடத்தில் நிறையப் பட்டங்களும், பரிசுகளும், சான்றிதழும் பெற்று விட்டேன்.   


எழுத்து தளத்தில் மதிப்பிற்குரிய சர்பான், ஆவுடையப்பன், கவின் சாரலன், பழனிக்குமார் மற்றும் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்னுடைய படைப்பிற்கு விமரிசம் எழுதியோர் அனைவருக்கும் நன்றி. இவர்கள் யாவரையும் ஒருபோதும் மறக்க இயலாது..   இதையெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு,  சட்டென்று மீண்டும் எழுத்து தளத்தில் பதிவிட்டால் என்னவென்று தோன்றியது, இப்பொழுதெல்லாம், நான் புதுக்கவிதையிலிருந்து முற்றிலும் மாறி, முழுவதும் இலக்கண மரபுப்படி எழுதிவரும் கவிதைகளே அதிகம் எனலாம்.  தற்போது புலனங்களில் அதிகளவு பங்கெடுத்து வருகிறேன். உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நேற்று எழுதிய வெண்பாவோடு மீண்டும் எழுத்து தளத்தில் பதிவை ஆரம்பிக்கிறேன்.

  18-06-19, செவ்வாய்க் கிழமை

கவிஞர்கள் சங்கமம் என்கிற புலனத்தில்  கொடுத்த தலைப்பு:: *கவிஞன்*

=================

எழுத்தாணி கொள்வான்.! எதையுமே ஆள்வான்.!

எழுத்தே உயிரென ஏற்பான்.! - எழுத்தால்

புவியை அடிமைப் படுத்தும் செயலெ

*கவிஞனெனும் சொல்லுக் கழகு*

=================
இரு விகற்ப
நேரிசை வெண்பா
=================

இதை வெவ்வேறு  புலனத்தில் வெளியிட்டபோது, அதிக அளவில் பாராட்டுப் பெற்ற வெண்பா.

உலகத்தில் சாதனை புரிவோர், ஏதோவதொரு வகையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டித்தான் அச்சாதனையைப் புரிகின்றனர். அது எவ்விதமான கலையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். மலையேற்றம், விளையாட்டு, அறிவியில், கண்டுபிடிப்பு இப்படிப் பலவற்றுள் தன்னுடைய எழுத்தால் உலைகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த எழுத்தாளன், கவிஞன் உலகத்தில் ஏராளம். எழுத்தால் புரட்சி செய்த, எழுத்தால் பிரபலமான, எழுத்தால் உலகை ஆண்ட பலரை நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். நினைவில் வருபவரை பிறருக்கு அடையாளம் காண்பிப்போம். இப்படிச் சாதனை புரிந்தோரை, உங்கள் நினைவுகளில் கொண்டு வாருங்கள்.. நன்றி..

கவிஞர் பெருவை பார்த்தசாரதி  

நாள் : 19-Jun-19, 1:01 pm

மேலே