"காதல் கசக்குதையா"
பாதையில் காத்திருந்து
பார்வைக்காய் பூத்திருந்து
காதலித்தேன்
அவள் அழகுபாவை;
காதலின் ஓட்டத்திலே
கால கனாக்களை
காரைத்துவிட்டால்
வாடி..,போடி.. என
நான் சொல்ல இன்று
"வாடிபோடா" என்று
வாய்கூசாமல் சொல்லிவிட்டாள்
என்றோ..என் பாதையில்
அடி மாறிமாற்றினாள்;
இன்றோ.. போதைக்கு
அடிமையாக்கினாள்;
இன்று உணர்ந்து கொண்டேன்
காதலும் சொறிதான் என;
சொறிய சொறிய இன்பம்
சொறிந்தபின் துன்பம்
தோல்வியால் துவண்டுவிட்டேன்
அவளின் மூடிவைத்த பேச்சுக்கள்
தாடிவைத்து கையில்
பீடி ஏந்த வைத்தன;
அவள் இல்லாத காதல்
கசக்கும்மென்பேன் இன்று
அவளால் தான் காதல்
கசக்குது என்கிறேன்;
தேவதை என நினைத்தேன்
தேவையா இந்த வதை என
புலம்பவைத்துவிட்டாய்...
இறுதியில் நிருபித்துவிட்டாய் பெண்ணே..
நீ உண்மையில் கசக்கும்
"பாவை" என்று......