நற்பண்பின் தாயகம்! நபிகள் நாயகம்! ஓடையாக உள்ளம் துள்ளுமே..!...
நற்பண்பின் தாயகம்!
நபிகள் நாயகம்!
ஓடையாக உள்ளம்
துள்ளுமே..!
ஒரு பெயரை
உச்சரிக்கவே ...
கோடையில் மழை
சிந்துமே...!
கோமான் நபியை
நினைக்கவே ...!
ஏடு போதாது
ஏந்தலுக்கு
கவி சொல்ல ....
ஈடு ஆகாது
இவருக்கு
இணை சொல்ல ...
எந்தன் நபி
பண்புகளை பாட..
எந்த நூலெடுத்து
வார்த்தைகளை தேட ...?
அனுதினம்
அண்ணல்
நபி மீது..
குப்பை
கொட்டும்
கிழ மாது..
ஒரு தினம்
போயினள்
காணாது..
என்ன நேர்ந்தது இன்று
ஏன் வரவில்லை என்று
உடன் விரைந்து சென்று
நலம் அறிந்த உயர்
நபிக்கு ஈடேது...??
வந்துவிட்டார்
தூதர் என்று ..
வெளியேறிய
மாதர் அன்று...
வாழ இடம்
தேடி நடக்க ...
வழி சென்ற
நாதர் கடக்க ...
அன்னையாய்
அவர் சுமை
தான் சுமக்க ...
தன்னையோ
வழியெல்லாம்
திட்டி தீர்க்க ...
நெஞ்சத்தில்
வஞ்சனை
வைக்கவில்லை...
கொஞ்சமும்
கோபத்தை
காட்டவில்லை ...
எண்ணிய இடம்
எட்டிய நேரம் ...
கண்ணியம் காட்டி
இத்தனை தூரம் ...
எம்பாரம் தாங்கி வந்த
தாங்கள் யார் ..??
பெண்மணி வினா
தொடுக்க....
வழி எல்லாம்
பழி சொல்லி
வந்த பொல்லா
நபி நான் தான் ...
கண்மணி விடை
கொடுக்க ...
விழி ஓரம்
ஈரம் நனைக்க....
விருட்டென்று
உடல் சிலிர்க்க...
விரல் உயர்த்தி
கலிமா உரைக்க ...
வியப்பூட்டும்
விந்தை நபி
குணம் கண்டு
சிந்தை மயங்காதார்
உண்டோ..???